கோடி அடிச்ச 'லேடி'... 'ஏழரை' வருது தேடி!

Added : ஜன 29, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ஷாப்பிங்' புறப்பட்ட சித்ரா, வ.உ.சி., மைதானம் வழியாக ஸ்கூட்டரை ஓட்டினாள்.பூங்காவை பார்த்ததும், ''அக்கா, ரொம்ப நாளாச்சு... வாங்க, பூங்காவுக்குள் ஒரு 'ரவுண்ட்' போயிட்டு வரலாம்,'' என இழுத்தாள்.டிக்கெட் வாங்கிக்கொண்டு, பூங்காவுக்குள் நுழைந்ததும், 'கப்' தாங்காமல், இருவரும் மூக்கைப் பொத்தினர்.''என்னக்கா, 'ஸ்மார்ட் சிட்டி'யில என்னென்னமோ செய்யப் போறதா சொல்றாங்க.
கோடி அடிச்ச 'லேடி'... 'ஏழரை' வருது தேடி!

'ஷாப்பிங்' புறப்பட்ட சித்ரா, வ.உ.சி., மைதானம் வழியாக ஸ்கூட்டரை ஓட்டினாள்.
பூங்காவை பார்த்ததும், ''அக்கா, ரொம்ப நாளாச்சு... வாங்க, பூங்காவுக்குள் ஒரு 'ரவுண்ட்' போயிட்டு வரலாம்,'' என இழுத்தாள்.
டிக்கெட் வாங்கிக்கொண்டு, பூங்காவுக்குள் நுழைந்ததும், 'கப்' தாங்காமல், இருவரும் மூக்கைப் பொத்தினர்.
''என்னக்கா, 'ஸ்மார்ட் சிட்டி'யில என்னென்னமோ செய்யப் போறதா சொல்றாங்க. இங்க, நாறிக்கெடக்குது,'' என அங்கலாய்த்தாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல, 'ஸ்மார்ட் சிட்டி' நிதியை தவிர, வேற 'பண்ட்' கெடையாது; எந்த வேலை செஞ்சாலும், அந்த நிதியை பயன்படுத்த முயற்சி பண்றாங்க. ஆனா, பூங்கா அமைஞ்சிருக்கிற இடம், அந்த எல்லைக்குள்ள வராது. இருந்தாலும், 20 கோடி ரூபா செலவழிக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''அதான், 396 கோடி ரூபா ஒதுக்கியிருக்காங்கள்ல... அதை செலவழிக்கணும்னு பார்ப்பாங்க...''
''அந்த பணத்தை, 'எடுக்குறது' ரொம்ப கஷ்டம்ப்பா; இதுவரைக்கும் வெறும், 6 கோடி ரூபாதான் செலவழிச்சிருக்காங்க. 'ஜியோ டேக்'ங்கிற சிஸ்டத்துல, சென்ட்ரல் கவர்ன்மென்ட் உஷாரா கண்காணிக்குதாம். ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,ல 'எடுத்த' மாதிரி, ஈஸியா ஒதுக்க முடியாதாம். வேலைய முடிச்சு, போட்டோவோடு, பதிவேற்றம் செஞ்சாதான், நிதி கெடைக்குமாம்...''
''ஓஓஓஓ....''
''அப்ப... எப்படி? பூங்காவுல வேலை செய்வாங்க...''
''அதெல்லாம்... காகிதத்துல சொல்ற திட்டம்தான்... நடைமுறைக்கு வர்றதா இருந்தா, இன்னும் பல வருஷம் மெனக்கெடணும்; நாம இந்த ஊர்லதான இருப்போம்; செய்றாங்களான்னு பார்ப்போம்'' என்ற சித்ரா, துர்நாற்றம் தாங்காமல், பூங்காவில் இருந்து, வெளியேறினாள்.
ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, சித்ரா பின்னால் அமர்ந்து கொண்டாள்.
கலெக்டர் ஆபீஸ் வழியாக சென்றபோது, ''என்னக்கா, 'ரிலீவ்' ஆகிட்டாருன்னு சொன்னாங்க... உண்மையா?'' என, கொக்கியை போட்டாள் மித்ரா.
''ஆமாப்பா, அவரோட மகனுக்கு, அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்காரு. அதுக்காக, 'லீவு' போட்டுட்டு கெளம்பிட்டாரு. இன்னொரு அதிகாரிக்கு அதிகாரத்தை கொடுத்துட்டு போயிருக்காரு. வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்' ஆனதும், புது அதிகாரி வருவாருன்னு சொல்றாங்க...''
''ஆமாக்கா... இதையேதான் குடியரசு தினவிழாவிலும் பேசிக்கிட்டாங்க... இதுதான், தேசியக்கொடி ஏத்துற கடைசி விழான்னு, உருக்கமா சொல்லியிருக்காரு...''
''கார்ப்பரேஷன்ல இருக்கற அதிகாரி, இந்த 'பதவி'க்காக காத்துக்கிட்டு இருக்காரு. அவருக்கு கெடைக்குமா அல்லது வேற ஒருத்தரு வருவாரான்னு தெரியலை...''
''மூன்றெழுத்து அடைமொழியோடு கூப்பிடுற, எம்.எல்.ஏ., உறவுக்காரங்க, ஓட்டல் நடத்துறாங்க... பிளாஸ்டிக் கன்டெய்னர்ல உணவு பார்சல் செஞ்சு கொடுத்திருக்காங்க. கார்ப்பரேஷனுக்கு தகவல் போனதும், உத்தரவு போயிருக்கு; வார்டு அதிகாரி மென்னு முழுங்கியிருக்காரு; உயரதிகாரி தரப்புல, கடிச்சுக் கொதறியதும், கடைக்கு போயி, அபராதம் விதிச்சிருக்காரு. இதே மாதிரி, டவுன்ஹால் சுத்தியிருக்கற கடைகளுக்கும், 'ரெய்டு' போயி, 'பைன்' தீட்டிட்டாங்க...''
''ஓ...அப்படியா...?''
ரயில்வே ஸ்டேஷனை கடந்தபோது, நகைக்கடை விளம்பரத்தை பார்த்த மித்ரா, ''வர, வர தங்கம் கடத்துறது ரொம்ப அதிகமாயிடுச்சு... ரெண்டு நாளைக்கு முன்னாடி, இலங்கையில இருந்து வந்த விமானத்துல தங்கம் கடத்துன கேசுல, விமான சேவை நிறுவன ஊழியர்கள் ரெண்டு பேரை 'அரெஸ்ட்' பண்ணியிருக்காருங்க... ஆனா, எந்த நிறுவனம்னு சொல்ல மறுக்குறாங்க,''
-'ஜெட்' வேகத்தில் சொல்லிக்கிட்டே போனாள் மித்ரா.
''நிறுத்து... நிறுத்து... கொஞ்சம் பொறுமையா சொல்லு... விமானம் மாதிரியே, வேகமா போறீயே...'' என கிண்டலடித்த சித்ரா, ''லேடி இன்ஸ்., ஒருத்தருக்கு கோடிக்கணக்குல கரன்சி கைமாறி இருக்காமே...'' என, வம்புக்கு இழுத்தாள்.
''ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... 'பைன் பியூச்சர்'ங்கிற நிறுவனம், 800 கோடி ரூபாய்க்கு மேல மோசடி செஞ்ச வழக்குல... எதிரிகளுக்கு சாதகமா போலீஸ்காரங்களே முறைகேட்டுல ஈடுபட்டதா, இ.ஓ. டபுள்யூ., எஸ்.பி.,க்கு, ஆதாரப்பூர்வமா புகார் போயிருக்கு,''
''முறைகேடுகளை மறைக்கிறதுக்காக, லேடி இன்ஸ்.,க்கு கோடிக்கணக்குல கரன்சி கைமாறியிருக்கு. ஆதாரப்பூர்வமா புகார் போனதால, விசாரணை நடத்துறதுக்கு,
இ.ஓ.டபுள்யூ., எஸ்.பி., கோவைக்கு வர்றாராம். எஸ்.பி., பொன்மாணிக்கவேல் டீம்ல இருந்த நேர்மையான அதிகாரியாம். உண்மையா, நேர்மையா விசாரிச்சா, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிங்க, 'சஸ்பெண்ட்' ஆக வாய்ப்பு இருக்காம்....''
''அதெல்லாம் சரி... 'ஜாக்டோ-ஜியோ'காரங்க, இவ்ளோ போராட்டம் செஞ்சுக்கிட்டு இருக்காங்களே...'' என, இழுத்தாள் சித்ரா.
பெரியகடை வீதிக்கு ஸ்கூட்டரை திருப்பிய மித்ரா, ''கோயமுத்துார் நெலவரத்தை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனரே, நேரடியா கவனிச்சிட்டு இருக்காரு... 'வாட்ஸ்-அப்'ல வர்ற வீடியோ பதிவுகளையும் ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்காங்க,''
''வாத்தியார்கள, தங்கள் பக்கத்துக்கு இழுக்கறதுக்கு, எதிர்க்கட்சிக்காரங்களும் முயற்சிக்கிறாங்களாமே...''
''அதுவா, மறியல் செஞ்சவங்கள கைது செஞ்சு கல்யாண மண்டபத்துல, தங்க வச்சிருந்தாங்க. அவுங்களுக்கு தி.மு.க.,காரங்களும், அ.ம.மு.க., கட்சிக்காரங்களுக்கும் சொந்தக்காசு செலவு பண்ணி, 'டிபன்' வாங்கிக் கொடுத்திருக்காங்க...''
''எலக்சன் வரப்போகுதுல... அதான்... பாசம் காட்டியிருப்பாங்க...'' என்ற சித்ரா, ''தொழில்துறை வட்டாரத்துல அதிருப்தி இருந்துச்சாமே...'' என, கொக்கி போட்டாள்.
''நம்மூர்ல பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடந்துக்கிட்டு இருக்கு; துவக்க விழாவுல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துக்கிட்டாங்க. முதல்வர் பழனிசாமி வருவாருன்னு எதிர்பார்த்தாங்க. மதுரையில பிரதமர் கலந்துக்கிற நிகழ்ச்சிக்கு போயிட்டதுனால, 'அப்செட்' ஆயிட்டாங்க.
''அப்புறம், கோயமுத்துார்ல துவங்கப்போற, 'இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன்' சென்டரை, திருச்சியில நடந்த விழாவுல, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வச்சாங்க. இதுவும், தொழில்துறையை சேர்ந்தவங்கள வருத்தப்பட வச்சுச்சு...,''
''மார்ச்சில் நடத்த திட்டமிட்டிருந்த, மோப்பிரிப்பாளையம் 'கொடிசியா' தொழிற்பூங்கா கட்டுமான பணியை, வர்ற, 6ம் தேதி துவங்கப் போறாங்க. அதுல, முதல்வரும், மத்திய அமைச்சரும் கலந்துக்கிறப் போறாங்க. இதுனால, தொழில்துறையினர் 'பூஸ்ட்' ஆகிட்டாங்க...'' என்றாள் மித்ரா.
வழியில் தென்பட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை பார்த்ததும், ''ஏற்கனவே இருக்குற கட்டடத்தையே, சீரமைச்சு கணக்கு காட்ட திட்டம் போட்டுருக்காங்களாம்...'' என, வில்லங்க விவகாரத்தை சொல்ல ஆரம்பித்தாள் சித்ரா.
''என்னக்கா... அது...'' ஆர்வமுடன் கேட்டாள் மித்ரா.
''அரசு ஆஸ்பத்திரியில, தீத்தடுப்பு நடவடிக்கைக்கு தொட்டி கட்ட, 26 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்காங்க. இதே மாதிரி இன்னும் ஏகப்பட்ட நிதி கெடைச்சிருக்கு. இருக்கற தொட்டியையே சீரமைச்சு, கணக்கு காட்ட, 'பிளான்' போட்டிருக்காங்க.
பழைய கட்டங்களையே புதுப்பிச்சு, 'அலாட்மென்ட்' தொகைய அமுக்கப் பார்க்குறாங்க,'' என்று சொல்வதற்கும், டவுன்ஹால் வருவதற்கும் சரியாக இருந்தது.
ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, இருவரும் 'ஷாப்பிங்' கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
03-பிப்-201908:27:14 IST Report Abuse
NARAYANAN.V பொன்.மாணிக்கவேலே இந்தக்கேஸையும் விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
01-பிப்-201912:02:03 IST Report Abuse
sivakumar கேடி இன்ஸ் ஆப்புடுவாரா ? பெபே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X