அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆட்சி மாற்றம் உருவாக்கி காட்டுவோம்

சென்னை: 'மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை, உருவாக்கியே காட்டுவோம்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம்,உருவாக்கி காட்டுவோம்,ஸ்டாலின்


தன் கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: கிராம சபை கூட்டத்தில், மக்களை காணும்போது, எனக்கு கருணாநிதி தான்நினைவுக்கு வருகிறார். மக்களும், என்னை பார்க்கும் போதும், பேசும் போதும், கருணாநிதி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். மறைந்தும், மக்களின் மனங்களில், அவர் வாழ்கிறார்.

கருணாநிதி, ஆட்சிக் காலத்தில், கிராம மக்களின் நலன் கருதி, அண்ணா

மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். நகரங்களும், மாநகரங்களும் மேம்படுத்தப்பட்டன. மின்சாரம், குடிநீர், குடியிருப்பு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு என, அனைத்து விதமான கட்டமைப்புகளும் உள்ள கிராமங்களை உருவாக்கியவர், கருணாநிதி.

அந்த பொற்கால ஆட்சியை, தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அதை, ஜனநாயக வழியில் அமைக்க வேண்டிய கடமை, தி.மு.க.,வுக்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை, உருவாக்கியே காட்டுவோம். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

கல்விக்கடன் உறுதி


தர்மபுரிமாவட்டம் அரூர் சட்டசபை தொகுதி செட்ரப்பட்டி பஞ்சாயத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அரூர் தொகுதிக்கு ஒராண்டாக எம்.எல்.ஏ. இல்லாததால், உள்ளூர்பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.

மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி வந்தவுடன் கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என உறுதியளிக்கிறேன். ஜெ., யால் பலன் பெற்றவர்கள், அவர் மறைவுக்கு இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
31-ஜன-201910:34:53 IST Report Abuse

Nisha Rathiஇவர் தான் முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் நினைத்து, மக்கள் முதல்வராகியது எம் .ஜி .ஆர் மற்றும் என் .டி . ராமாராவ் அவர்களை மட்டுமே . அவர்களும் இருந்தவரை மக்களுக்காக வாழ்ந்து இறந்த பின்னும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள் . மேலே குறிப்பிட்ட இந்த இரு முதல்வர்களும் ஆட்சி பீடம் ஏறியவுடன் ,அல்லக்கைகள் , குடும்ப அரசியல் , ஜாதி அரசியல் , அமைச்சர்கள் , மத்திய அரசு , அண்டை மாநில அரசு , அரசு ஊழியர்கள் , காவல் துறை அதிகாரிகள் , உளவு துறை அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து வந்த நெருக்கடிகளை சமாளித்து முதல்வராக வெற்றியும் கண்டனர் . இன்றோ ..."

Rate this:
Manian - Chennai,இந்தியா
31-ஜன-201909:44:09 IST Report Abuse

Manianஉங்கள் குடும்பத்தை மட்டுமே மக்கள் என்று சொல்ல முடியுமா? எந்த மக்களும் உங்களை அழைக்க வில்லை. இப்போ ஆரியர்கள் ஒழிந்து விட்டார்கள். தலித்துக்கள், பிற்படுத்தியோர் உங்களை நம்ப மாட்டார்கள். தற்போது அரசிலில் பதவி வகிக்கும் -தேவர்கள்- வன்னியர்கள் - கொங்கு வேளாளர்கள்- உங்களை தீண்ட மாட்டார்கள். மிச்சம் மக்கள் யாரு?

Rate this:
30-ஜன-201920:37:46 IST Report Abuse

Padmanabhan VenkateshSudala.. sathyama neeyum un katchiyum venave venam.. Ippo nalla than poitrukku.. ipdiye vutru..

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X