பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போராட்டம்,தூண்டிய,சங்க நிர்வாகிகள்,வலை


சென்னை: வேலை நிறுத்தத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டத்தை துாண்டி விட்ட சங்க நிர்வாகிகளுக்கு, வலை விரிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற பின்னரும், சங்க பதவியை விடாமல், உசுப்பேற்றி விட்டவர்கள் பட்டியலும் தயாராகிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், ஜன., 22 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் முதல் நாளிலேயே, அரசு ஊழியர்களில், ஒரு தரப்பினர் மட்டுமே களத்தில் இருந்தனர்.அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், போராட்டம் வேண்டாம் என, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் துறை கமிஷனர் சத்ய கோபால் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். அதனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், வேலைக்கு

திரும்பினர்.
ஆனால், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மட்டும், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பெரும்பாலான இடங்களில், பள்ளிகளுக்கு பூட்டு போட்டு, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் வராததால், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களும், பொது மக்களும் ஆசிரியர்களின் போராட்டத்தால், கடும் கோபம் அடைந்தனர். பல இடங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வர வலியுறுத்தி, மாணவர்களும், பெற்றோரும் மறியல் செய்தனர்.
சமூக வலைதளங்களிலும், ஆசிரியர்களின் போராட்டத்தை, கடுமையாக விமர்சனம்

எழுந்தது.சாலைகளில் இறங்கி, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியர்களில், 1,061 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மேலும், பணிக்கு வராத ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பணியிடங்கள் காலியாகும் என்றும், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என்றும், பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையால், நேற்று முன்தினம், 70 சதவீத ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு வந்தனர். நேற்று, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பி

விட்டதாக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்தார்.இவர்கள் அனைவருமே, போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்ப வில்லை என்றும், இவர்களை, சில சங்க நிர்வாகிகளே துாண்டி விட்டனர் என்றும், இவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது; சில ஆசிரியர்கள், வெளிப் படையாக பேட்டியும் கொடுத்தனர்.
இவர்களில், சங்க நிர்வாகிகள் மட்டும், இன்னும் வேலையை புறக்கணித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்று, சங்க நிர்வாகிகளாக உள்ளவர்கள், அவர்களை தடுப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.எனவே, அரசு இயந்திரத்தை முடக்கும் நோக்கில், போராட்டத்தை துாண்டி விடும், சங்க நிர்வாகிகளின் விபரங்களை திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஓய்வு பெற்ற பின்னும், சங்க பதவியை விடாமல் இருப்பவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.தாங்கள் பணியாற்றிய துறையை முன்னேற்ற உதவாமல், குழப்பம் செய்வோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாமா என, அரசு தரப்பில், ஆலோசனை நடந்து வருகிறது. எதிர்காலத்தில், பிரச்னைகள் எழாமல் தடுக்க, இந்த நடவடிக்கை உதவும் என, அரசு தரப்பு நம்புகிறது.


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravana - Hyderabad,இந்தியா
30-ஜன-201919:20:35 IST Report Abuse

SaravanaFew senior teacher's in government schools, who is hiring youngsters with less salary(Between 4K and 10K) and asking them to do their work in their school. The senior teacher's are doing their business and they even not coming to school. They come for collecting salary and going away to do personal work. Why government is giving more salary to them. Most of the issues are starting from the teachers union. Government should close all teachers union in tamilnadu. Most of the school teachers are not efficient to educate to students up to the market. Teacher's from first class is getting 40 thousand to 60 thousand. How many formers in this country earning these much salary. Many engineering graduated student still finding difficult to earn 10 thousand per month. Why we should not remove these poor teachers and hire qualified youngsters. Why performance check is not happening with the existing teachers?. Poor performance, Not coming to school, They do their own business in school hours, They run their own finance, Schools and other business. We have to find these teachers and remove from school for next generation.

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
30-ஜன-201918:52:40 IST Report Abuse

Vasanth Saminathanடைரக்ட்டா எம்.எல்.ஏ எம்.பி கூடத்தான் கம்பேர் பண்ணுறது. அவுங்க அஞ்சு வருஷத்துல ஒழுங்கா பணியாற்றவில்லை என்றால் தூக்கி எறியப்படுவார்கள். நீங்களும் தயாரா? முந்நூற்று சொச்சம் மக்கள் பிரதிநிதிகளுடன் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒப்பிட்டால் எப்படி சரியாக இருக்கும்? தனியார் துறை ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு பாருங்களேன். பத்து மடங்கு சம்பளம் குறைத்துக் கொள்கிறீர்களா?

Rate this:
oce - tokyo,ஜப்பான்
30-ஜன-201918:09:22 IST Report Abuse

oceசென்ற ஆண்டு குரூப் நான்கு சர்வீஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேறியவர்கள் நிறைய பேர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பி.இ பட்டதாரிகள். அவர்களில் இருந்து தலைமை செயலகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் எழுத்தர்களாக நியமிக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் கம்ப்யூட்டர் இயக்குபவர்கள்.

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X