பொது செய்தி

தமிழ்நாடு

வடபழனி முருகன் கோவில் தக்காராக 'தினமலர்' ஆதிமூலம் நியமனம்

Updated : ஜன 29, 2019 | Added : ஜன 29, 2019 | கருத்துகள் (39)
Advertisement
வடபழனி முருகன் கோவில் தக்கார் 'தினமலர்' ஆதிமூலம்

சென்னை : சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் தக்காராக, 'தினமலர்' நாளிதழின், வர்த்தக பிரிவு இயக்குனரும், கோவை பதிப்பு வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடபழனி ஆண்டவர் கோவில், முதுநிலை திருக்கோவில். இது, அறநிலையத் துறை துணை கமிஷனர் மற்றும் அலுவல் சார் தக்காரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அலுவல் சார் தக்காராக, கோவில் துணை கமிஷனரே செயல்பட்டு வந்தார்.






தற்போது, கோவிலின் நிர்வாக நலன் கருதி, அலுவல் சாரா தக்காராக, 'தினமலர்' நாளிதழின் வர்த்தக பிரிவு இயக்குனரும், கோவை பதிப்பின் வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, அவரிடம், தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், பணீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravind - coimbatore,இந்தியா
30-ஜன-201921:51:37 IST Report Abuse
Aravind தினமலர் தயவுசெய்து டிவி சேனல் தொடங்குங்கள் எனக்கு தெரிந்தவரை உண்மையை உரக்க சொல்வது தினமலர் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜன-201921:36:43 IST Report Abuse
Natarajan Ramanathan கட்டண தரிசனத்தை ஒழியுங்கள். காவலர்கள் உள்பட எவருக்குமே சிறப்பு குறுக்குவழி அனுமதி கூடாது. இஷ்டம் இருந்தால் வரிசையில் வரட்டும்......
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
30-ஜன-201921:34:48 IST Report Abuse
chinnamanibalan கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழக கோவில் நிர்வாகம் அனைத்தும், அலுவல் சாராத அறங்காவலர் அல்லது தக்கார் நியமனமின்றி, அறநிலையத் துறை அதிகாரிகள் தக்கார் ஆக தொடர்ந்து பணியாற்றி வந்ததன் விளைவு, கோவில்களில் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இனியாவது கோவில்களில் தூய்மையான நிர்வாகம் நடைபெறு வழி காணப்பட வேண்டும். தினமலர் நாளிதழ் குழுவைச் சேர்ந்த திரு. ஆதிமூலம் அவர்கள் வடபழனி முருகன் கோயில் தக்காராக நியமனம் செய்யப்பட்டது மிகவும் பாராட்டுக்கு உரியது. அவரது பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X