பொது செய்தி

இந்தியா

குடிசையில் வசிக்கும் எம்.எல்.ஏ.,; வீடு கட்டி தரும் தொகுதி மக்கள்

Updated : ஜன 30, 2019 | Added : ஜன 30, 2019 | கருத்துகள் (69)
Advertisement
குடிசையில் வசிக்கும்,எம்.எல்.ஏ.,வீடு கட்டி தரும்,தொகுதி மக்கள்

போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.





மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.





இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர்.





இது குறித்து, எம்.எல்.ஏ., சீதாராம் கூறியதாவது:என் மீது மக்கள் காட்டும் அன்புக்கு, நிச்சயம் கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்றதும், என் எடைக்கு நிகராக, காசுகளை அன்பளிப்பாக அளித்தனர். அந்தப் பணத்தை வைத்து, குடிசையில் பராமரிப்புப் பணிகள் செய்தேன். தற்போது வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
17-பிப்-201917:12:18 IST Report Abuse
Gnanasekaran Vedachalam நமது நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டியாய் அமர்ந்து உள்ளார் இவரை பார்க்கும் போது மக்கள் மகாத்மா காந்தி காமராஜர் கக்கன் அண்ணா இன்னும் பல தலைவரை நினைவு கூர்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
30-ஜன-201919:06:51 IST Report Abuse
சுந்தரம் அடுத்த தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலோ அல்லது வாய்ப்பு கிடைத்து தோல்வி அடைந்தாலோ...?
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
31-ஜன-201909:59:19 IST Report Abuse
Karunanஉங்களைத்தான் குற்றம் சொல்லணும் அழகரே?..எதட்கு அனுமானிக்கிறீர்கள்?...
Rate this:
Share this comment
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
31-ஜன-201913:36:51 IST Report Abuse
Sivan Mainthanநல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு என்றைக்குமே இருக்கும். எந்த கட்சியும் சுலபமாக வெற்றி பெறுவார் என்கிற வேட்பாளரை மாற்றும் முட்டாள் தனத்தை செய்யாது....
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
30-ஜன-201917:59:40 IST Report Abuse
Gopi இந்த மாதிரி மக்களையும் தலைவர்களையும் பார்ப்பதே அபூர்வம். இந்த மக்களின் தேவைகளை இந்த எம் எல் ஏ கட்டாயம் நிறைவேற்றும் மனோ நிலையை இறைவன் என்றென்றும் தரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X