பொது செய்தி

இந்தியா

ஊழல் நாடுகள் பட்டியல்: 78 வது இடத்தில் இந்தியா

Updated : ஜன 30, 2019 | Added : ஜன 30, 2019 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி : உலக அளவில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2018 ம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று (ஜன.,29) வெளியிடப்பட்டது.
இந்தியா, ஊழல் நாடுகள், ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்

புதுடில்லி : உலக அளவில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2018 ம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று (ஜன.,29) வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 81 வது இடத்தில் இருந்து 78 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே சமயம் ஊழல் மிகுந்த டாப் 20 நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.


latest tamil newsஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா 87 வது (கடந்த ஆண்டு 77 வது இடம்) இடத்திலும், பாகிஸ்தான் மாறாமல் கடந்த ஆண்டு இருந்த 117 இடத்திலும் உள்ளன. ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரை மலேசியா 47 வது இடத்திலும், மாலத்தீவு 31 வது இடத்திலும், பாகிஸ்தான் 33 வது இடத்திலும், இந்தியா 41 வது இடத்திலும் உள்ளன.


latest tamil newsஊழல் மிகக்குறைந்த நாடுகளில் டென்மார்க், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிரண்டு இடத்தையும், சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
30-ஜன-201915:40:00 IST Report Abuse
ஜெயந்தன் ஊழல் இல்லாத மாநிலம் தமிழ் நாடு தான்... ஊழல் செய்யாத முதல்வர் எங்கள் தங்கம்....எடப்பாடி தான்....
Rate this:
Cancel
sagar saritha - Chennai,இந்தியா
30-ஜன-201915:31:16 IST Report Abuse
sagar saritha //அதே சமயம் ஊழல் மிகுந்த டாப் 20 நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.//தவறு. கடந்த ஆண்டை விட அதன் மதிப்பெண் குறைந்ததால் ஊழல் இல்லாத அல்லது குறைந்தபட்ச ஊழல் உள்ள நாடுகள் பட்டியலிருந்து அது வெளியேறியுள்ளது. It scored 71/100 in year 2018 as against 75/100 scored during last year. ரேங்க் அதிகமானால் மதிப்பெண் கம்மி என்று தான் அர்த்தம். முதல் ரேங்க் பெரும் நாடு ஊழல் இல்லாத நாடு என்றும் கடைசி ரேங்க் பெறும் நாடு ஊழலில் ஊறி திளைத்தது என்று அர்த்தம் கொள்ள வேண்டும் . India's Rank for years 2004 to 2018 ranges from 91, 92, 70,72, 85,84,87,95,94,94,85,76,79,81 and78 respectively.
Rate this:
Cancel
30-ஜன-201915:23:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இங்கே சுந்தரம் தவறாக புரிந்து கொண்டதை பலர் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியென்றால் இவரின் கருத்துக்களும் இப்படி வேறு வகையில் புரிந்துகொண்டு போடுவதுதான். ஊழலில் மார்க் 100 வரை போடுகிறார்கள் , அந்த மார்க்கின் அடிப்படையில் ரேங்க் போடுகிறார்கள் , அந்த ரேங்கில் முதல் இடத்தில் இருக்கும் நாடு ஊழல் குறைவானது அதாவது டென்மார்க், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிரண்டு இடத்தையும், சிரியா, சூடான் கடைசி ரேங்க் அதாவது ஊழல் மிகுந்த நாடுகள். நாம் 81 வது ரேங்கில் இருந்து 78 வது ரேங்கிற்கு முன்னேறியுள்ளோம் , மோடி ஆட்சி தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் நடக்கும்போது இது 50 க்குள் வர வாய்ப்புள்ளது. அதை நோக்கித்தான் மோடி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்.
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
30-ஜன-201918:53:17 IST Report Abuse
சுந்தரம் நண்பரே எனக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள். உங்கள் கட்சியினர் பாஷையில் சொன்னால் நான் முட்டாள் தான். ஊழல் அதிகமாய் இருந்தால் கிடைக்கும் மதிப்பெண் பூஜ்யம். ஊழலே இல்லை என்றால் கிடைக்கும் மதிப்பெண் நூறு. நாம் ஊழலே இல்லாத நூற்றுக்கு அருகில் எண்பத்து ஒன்றில் இருந்தோம். இப்போது அதில் இருந்து பூஜ்யத்தை நோக்கி அதாவது அதிக ஊழலை நோக்கி நகர்ந்து எழுபத்தெட்டுக்கு வந்துள்ளோம். ஆக, அதிக ஊழல் எழுபத்தெட்டிலா அல்லது எண்பத்து ஒன்றிலா? (a scale of 0 to 100, where 0 is highly corrupt and 100 is very clean ) கொஞ்சம் விளக்குங்களேன். விளக்கிய பின்னர் கட்சி கொள்கைப்படி முட்டாளே மூர்க்கனே மடையனே டேய், யாரடா நீ போன்ற ஒருமை வசைகளை பயன்படுத்தலாம். தவறில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X