அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தை விடனும்: ஸ்டாலின் கோரிக்கை

Updated : ஜன 30, 2019 | Added : ஜன 30, 2019 | கருத்துகள் (54)
Advertisement

சேலம் : சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. வரும் லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் முறையான ஆட்சி நடக்காததால் நாடு குட்டிச்சுவர் ஆகி விட்டது என பேசினார்.


அறிக்கை:


ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். திமுக ஆட்சி அமையும் வரை நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பொறுமை காக்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும். அதிமுக அரசு அராஜக போக்கை கடைப்பிடித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் இன்று (ஜன.,30) 9வது நாளை எட்டி உள்ள நிலையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
30-ஜன-201918:46:16 IST Report Abuse
Vasanth Saminathan என்னது கோரிக்கை ஏற்கப்படுமா? அப்போ தீம்கா வோட்டுக்கு வேட்டு வைச்சிட வேண்டியது தான். இம்புட்டு பிரச்சினைக்கும் காரணமே உங்கப்பா தூக்கி கொடுத்தது தான். நீ இருக்குறதையும் வழிச்சி குடுப்ப பொதுமக்கள் வாயில விரலை வச்சிக்கிட்டு இருக்கணுமா.
Rate this:
Share this comment
Cancel
30-ஜன-201918:37:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதுதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது. முதலாளி சொன்னவுடன் அடிமைகள் உடனே போராட்டை கைவிட்டு விட்டார்களா ? இப்படி செய்தால் மக்களுக்கு தெரிந்துவிடாதா ?
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
30-ஜன-201918:25:33 IST Report Abuse
Bhagat Singh Dasan இவரு அறிக்கை விட்ட உடனே அவங்க நிறுத்தறாங்க, எஜமான் சொன்னதும் சேவகர்கள் செய்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X