பொது செய்தி

தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

Updated : ஜன 30, 2019 | Added : ஜன 30, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement

சென்னை: 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.



latest tamil news




தொடர் போராட்டம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் என தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சஸ்பெண்ட், பணியிட மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. போதிய நிதியில்லாத காரணத்தினால், அரசு ஊழயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய தமிழக அரசு, ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


latest tamil news




நடவடிக்கை



இந்நிலையில், சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 9 நாட்களாக நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேசவில்லை. ஆசிரியர், அரசு என இரு தரப்பும் ஒரு மித்த கருத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



நாளை முதல் பணி

பிப்ரவரி மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது மற்றும் செய்முறை தேர்வு துவங்குவதால், மாணவர்களின் நலன், பெற்றோரின் உணர்வு, முதல்வர் அழைப்பு, கட்சியினர் வேண்டுகோள், நீதிபதியின் கருத்துகளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். கோரிக்கை அப்படியே உள்ளது. போராடிய நிர்வாகிகள் சிறையில் உள்ளனர்.


latest tamil news




ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த பணியிடங்களை காலியாக அறிவித்து மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நாளை (ஜன.,31) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
31-ஜன-201915:34:31 IST Report Abuse
இந்தியன் kumar அரசு பணிகளில் விருப்பம் இல்லாதவர்கள் தனியார் நிறுவன்களில் சேர்ந்து கொள்ளலாம். என்கிற அறிவிப்பை வெளி இடலாம்.
Rate this:
Cancel
Muthukumar - INDIA,இந்தியா
31-ஜன-201909:23:00 IST Report Abuse
Muthukumar இவ்வளவு பிரச்சனைகளையும் சாதாரணமாக கையாண்டு வரும் எடப்பாடியார் அந்த நாற்காலிக்கு மிக பொருத்தமானவர். சுடாலின் எவ்வளவு முயற்சி செய்து ஆட்சியை கலைக்க நினைத்தாலும் அசால்ட்டாக அடிச்சு தூக்கும் எடப்பாடி கெத்து தான்..
Rate this:
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201900:32:17 IST Report Abuse
Ram RV மிகவும் திறமையாகப் பிரச்சினையைக் கையாண்ட தமிழக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். விரும்பியோ விரும்பாமலோ, இன்றைய நிலையில் தமிழகத்தை ஆள்வதற்கு அதிமுகதான் சிறந்த தேர்வு என்பதும் திமுக முற்றிலும் லாயக்கற்றது என்பதும் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. தமிழக மக்கள் அறிவார்ந்த முடிவை எடுப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X