உள்நோக்கத்துடன் சந்திப்பு ராகுலுக்கு பரீக்கர் கண்டனம்

Added : ஜன 30, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 உள்நோக்கத்துடன் சந்திப்பு ராகுலுக்கு பரீக்கர் கண்டனம்

பனாஜி, 'நோய்வாய்ப்பட்டுள்ள என்னை, உள்நோகத்துடன் நீங்கள் சந்தித்தது வேதனையளிக்கிறது' என, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எழுதியுள்ளகடிதத்தில், கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் குறிப்பிட்டுள்ளார்.கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பரீக்கர், அதற்காக, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சந்திப்புஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய அரசுக்கு எதிராக, காங்., தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார்.பிரதமர் மோடி மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான போது, ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கருக்கு, இதில் தொடர்புள்ளதாக, அவர் கூறி வருகிறார்.இந்நிலையில், கோவாவுக்கு சமீபத்தில் சென்றிருந்த ராகுல், முதல்வர் பரீக்கரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். 'பரீக்கரை, நட்பு ரீதியில் சந்தித்து, உடல் நலம் விசாரித்தேன்' என, ராகுல் குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையே, கேரள மாநிலம் கொச்சியில், நேற்று முன்தினம் நடந்த, காங்., பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், 'ரபேல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், தனக்கு எந்த பங்கும் இல்லை என, என்னிடம்பரீக்கர் கூறினார்' என்றார்; இது, பா.ஜ.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, ராகுலுக்கு, பரீக்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:நீங்கள், என்னை சந்திக்க வந்தது, அரசியல் ஆதாயத்திற்காக என்பதை நினைக்கும் போது, வருத்தம் அளிக்கிறது. ஐந்து நிமிடம் நடந்த சந்திப்பில், ரபேல் குறித்து, நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை; அது குறித்து விவாதிக்கவில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்வதற்காக, எனக்கு வாழ்த்து தெரிவிக்கவே, நீங்கள் சந்திப்பதாக நினைத்தேன். ஆனால் அதற்கு, வேறு உள்நோக்கம் இருப்பது, இப்போது தான் தெரிகிறது.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களை சந்திப்பதை, அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்பதே, என் கோரிக்கை.இவ்வாறு அந்த கடிதத்தில் பரீக்கர் குறிப்பிட்டுள்ளார்.பட்ஜெட் தாக்கல்உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள, முதல்வர் பரீக்கர், நேற்று, மூக்கில், 'டியூப்' பொருத்தப்பட்ட நிலையில், கோவா மாநில பட்ஜெட்டை, சட்ட சபையில் நேற்று தாக்கல்செய்தார்.அப்போது அவர், ''என் கடைசி மூச்சு உள்ள வரை, கோவா மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
31-ஜன-201913:20:18 IST Report Abuse
Sivan Mainthan உடம்புக்கு முடியாம இருக்கறவரை பார்க்கப்போறது ஒரு மனிதாபிமான செயல். ஆனால் என்ன செஞ்சிருக்குது பாருங்கோ.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
31-ஜன-201912:26:16 IST Report Abuse
adalarasan நாகரீகம் தெரியாதவர் என்று பல முறைகள் முன்பே ப்ரூவ்செய்து இருக்கிறார் மும்பு மன்மோஹன்சிங்ஜி பிரதமராக இருந்தபோது,அவருடைய மந்திரி குழு எடுத்த முடிவை, மக்களிடம் எதிர்ப்பு வந்தவரும், இவர் பொது கூட்டத்தில் அதை கிழித்து எறிந்தார். சமீப காலத்தில், பிரதமர் மோடியை கட்டி தழுவதுபோல் தழுவி விட்டு, பிறகு தன் சீட்டிற்கு வந்தவுடன் லோக்சபையிலேயே தான் கட்சி சகாக்களை PAARTHU கண்ணடித்து, சாகச சிரிப்பு, ஊடகத்தில் வெளியானவை…?உதாரணங்கள் இவரெல்லாம் பிரதமரானால் அதை விட இந்நாட்டிற்கு கெட்ட காலம் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-ஜன-201910:07:35 IST Report Abuse
ஆரூர் ரங் பாரிக்கரின் Apponitment முன்னனுமதியின்றி அவரை திடீரென சந்திக்கச்சென்றது  நாகரீகமற்ற செயல். உடல் நலம் மட்டும் விசாரித்துவிட்டு வெளியே ரபேல் பற்றி விவாதித்ததாக பச்சைப்பொய்   சொன்னது மஹா அநாகரீகம். இப்படிப்பட்ட மட்டமான செயல்களில் ஈடுபடுபவரை ஆதரிப்பது   தேசத்துரோகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X