பதிவு செய்த நாள் :
முடிவாகுமா?
10 நாட்களுக்குள் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி
தமிழகத்தில் இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கும், அ.தி. மு.க.,வுக்கும் இடையே கூட்டணி அமையுமா, இல்லையா என, அடுத்த, 10 நாட்களுக்குள் தெரிந்து விடும். வரும், 10ம் தேதி, பிரதமர் மோடி, திருப்பூர் வரும்போது, கூட்டணி குறித்த உறுதியான தகவலை தெரிவிக்கும்படி, அ.தி.மு.க.,வுக்கு, பா.ஜ., மேலிடம் தெரிவித்து உள்ளதாக,அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 நாட்களுக்குள்,அ.தி.மு.க.,பா.ஜ., கூட்டணி, முடிவாகுமா?,தமிழக,அரசியலில்,இனி,பரபரப்புக்கு,பஞ்சமிருக்காது


லோக்சபா தேர்தலில், பிற மாநிலங்களில், தனித்தோ அல்லது கூட்டணியாகவோ போட்டி இடுவது குறித்த வியூகங்களை, பா.ஜ., வகுத்து முடித்துவிட்டது.தமிழகத்தில், அ.தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக,தகவல்கள் வெளியாகின்றனவே தவிர, இது தொடர்பாக, இன்னும் உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
அடிக்கடி டில்லி வந்துபோகும், தமிழக முக்கிய அமைச்சர்கள் இருவர், கடந்த மாதமே, பா.ஜ., மூத்த அமைச்சர்களிடம், கூட்டணிக்கான வாக்குறுதியை அளித்துவிட்டுச் சென்றனர். ஆனால், திடீர் திருப்பமாக, அ.தி.மு.க.,வின் முக்கிய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டணிக்கு வாக்குறுதி கொடுத்த தமிழக அமைச்சர்கள், இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அதிருப்தியை சமாளிக்க, பா.ஜ., மேலிடத் திடம் அவகாசம் கேட்டனர். அதே

நேரத்தில், கூட்டணி விவகாரத்தில், அ.தி. மு.க., தலைமை நாடகமாடு கிறதோ என்ற சந்தேகமும், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான்,'எய்ம்ஸ் மருத்துவ மனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் தமிழ கம் வந்தபோது, கூட்டணி விஷயத்தில், உறுதி யான முடிவு எட்டப்படும்' என, பா.ஜ., தரப்பு எதிர் பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், கூட்டணிக்கான கனவை கைவிடாத, பா.ஜ., தற்போது, மீண்டும் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அடுத்த மாதம்,10ம் தேதி,பிரதமர் ,மீண்டும் தமிழகம் வருகிறார்.தேர்தல் பிரசாரத்திற்காக, அவர் திருப்பூர் வரவுள்ள நிலையில், அதற்குள், கூட்டணி குறித்து, தெளிவான செயல் திட்டத்துக்கு வந்து, இறுதி முடிவை தெரிவிக்கும்படி, அ.தி.மு.க., மேலிடத்துக்கு தகவல் தரப்பட்டு உள்ளது.

ஆலோசனை


பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், தமிழக கூட்டணி குறித்து, பா.ஜ., அக்கறை காட்டும் என, அ.தி.மு.க., நம்பியது. தற்போது, 'வெட்டு ஒன்று, துண்டு இரண்டு' என்ற கட்டத்திற்கு,பா.ஜ., மேலிடம் வந்துள்ளதால், டில்லியிலும், சென்னையிலும், பரபரப்பு தொற்றிஉள்ளது. இதையடுத்து, கூட்டணி தொடர்பாக, தீவிர ஆலோசனையில், அ.தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.


சாத்தியமுள்ள பிற கூட்டணி கட்சிகளுடன், ஏற்கனவே, திரைமறைவில் பேசி வந்தாலும், பா.ஜ., வைத்துள்ளகாலக் கெடுவை சமாளிக்க முடியுமா என, அ.தி.மு.க., யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை மீறி, மீண்டும் இழுபறி நீடிக்குமானால், கூட்டணிக் கான மாற்று வழியை தேடவும், பா.ஜ.. தயாராக உள்ளது.அதனால், அடுத்த, 10 நாட்களில், தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள்

Advertisement

ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேகதாது :அ.தி.மு.க., அதிரடி


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபால் பேசியதாவது:காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை, தமிழகம் ஏற்காது. இந்த பிரச்னையை, கடந்த கூட்டத் தொடரில் கிளப்பியபோது, எங்கள் குரல்கள் தடுக்கப்பட்டன.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு, சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த இரண்டு நடவடிக்கையுமே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானவை.கடந்த முறை, உணர்வுப் பூர்வமாக நாங்கள் காட்டிய எதிர்ப்புக்கு, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையே பரிசாக கிடைத்தது. எனவே, இந்த கூட்டத்தொடரில், எங்கள் உரிமையை நிலைநாட்ட வாய்ப்பு தர வேண்டும். தமிழகத்துக்கு, மத்திய அரசு தர வேண்டிய நிதி குறித்து எந்த பதிலும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-பிப்-201906:57:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அஸ்தமனத்தின் ஆரம்பம்.. ஆஹா..

Rate this:
A.Navarajan - Coimbatore ,இந்தியா
31-ஜன-201921:39:39 IST Report Abuse

A.Navarajanஅதிமுக, திமுக,அமமுக மூன்றையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
31-ஜன-201919:43:44 IST Report Abuse

r.sundaramஜெயலலிதா தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தது வேறு, தற்போதுள்ள தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பது வேறு. பூனை தன்னை புலி என்று நினைத்துக்கொண்டு நடமாடினால் அதற்குத்தான் ஆபத்து. ஐந்து வருடங்களுக்கு முன் உள்ள தமிழகம் அல்ல தற்போது. பிஜேபிக்கு கணிசமாக வாக்கு வாங்கி உயர்ந்துள்ளது. இதை அதிமுக உணர வேண்டும். இழுபறியில் இருக்கும் தொகுதிகளை பிஜேபி வாக்குகள் அதிமுகவுக்கு பெற்றுத்தரும். ஆதலால் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைப்பதுதான் இயற்கையாக இருக்கும். இல்லாவிடில் வாக்குகள் சிதறி திமுகவுக்கு சாதகமாக ஆகும். அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று பார்ப்போம்.

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X