அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் வாபஸ் பெற ஸ்டாலின் அழைப்பு

Added : ஜன 30, 2019 | கருத்துகள் (32)
Advertisement
 போராட்டம் வாபஸ் பெற ஸ்டாலின் அழைப்பு

சென்னை, 'அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறி உள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க., அரசு, அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே நம்பியிருப்பதால், மாணவர்கள், மக்கள் நலன் கருதி, அரசு ஊழியர்கள், போராட்டத்தைதிரும்பப் பெற வேண்டும்.ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தி.மு.க., ஆட்சி அமையும் வரை, பொறுமை காக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.அ.தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Kuppusamy - puducherry,இந்தியா
31-ஜன-201920:43:27 IST Report Abuse
Natarajan Kuppusamy ஆட்சி வந்தவுடன் செய்வேன் என்றால் பழைய ஓய்வூதியத்தை திருப்பி கொடுப்பாரா. எப்படியாவது ஆட்சிக்கு வர கனவு காண்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
31-ஜன-201920:09:17 IST Report Abuse
r.sundaram அதிசய பிறவி அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு. அவரை மாதிரியே போராட்டம் வாபஸ் ஆனபிறகு, போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டுகோள் விடுக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
31-ஜன-201918:44:13 IST Report Abuse
Ramachandran  Madambakkam ஒரு நேரத்தில் செயல்படாத அரசு என்று குற்றம் சாட்டுகிறார். ஒரு நேரத்தில் அராஜக அரசு என்று குற்றம் சொல்கிறார். பழைய பென்ஷன் திட்டம் எனும் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்ற முடியாதது என்பதை தெரிந்தும் அவர் யாரை ஏமாற்ற இப்படி கூறி வருகிறார் என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X