பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!
ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை:அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், ஒன்பது நாட்களாக நடத்திய வேலைநிறுத்தம், நேற்று வாபஸ் பெறப்பட்டது. 'இது, தற்காலிக முடிவு தான்' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு,ஊழியர்களின்,9 நாள்,வேலைநிறுத்தம்,வாபஸ்!,ஜாக்டோ-ஜியோ,அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 22 முதல், ஒன்பது நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டது. அதேநேரம், சாலை மறியலில் ஈடுபட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தை முறியடிக்கும் வகையில், 'ஜன., 25க்குள், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவித்தனர். இதை ஏற்று, ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர்.
பின், இந்த அவகாசம், 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது, 70 சதவீத ஆசிரியர்கள், பணிக்கு திரும்பினர். மீத முள்ளோருக்கு, நேற்று முன்தினம் இரவு வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 29ம் தேதி, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பினர். அதேபோல், மாணவர், பெற்றோர், அரசியல் கட்சியினர் மத்தியிலும், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சமூக வலைதளங்களில், ஆசிரியர்களுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. இறுதியாக, போராட்டத்தை துாண்டிவிடும் நிர்வாகிகள் குறித்து, அரசு பட்டியல் எடுக்க துவங்கியது. இந்நிலையில், 'மாணவர் நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.


அதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தினர். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றமும், பணிக்கு திரும்ப அறிவுறுத்தியது.ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மீனாட்சிசுந்தரம், கே.பி.ஓ.சுரேஷ், தியாகராஜன், அன்பரசு, வின்ஸ்டன் பால்ராஜ், சங்கரநாராயணன்

பங்கேற்றனர்.அதில், ஒன்பது நாட்கள் நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெறுவது என, முடிவு எடுக்கப்பட்டது.

சம்பளம் இன்று கிடைக்காதுபோராட்டத்தில் பங்கேற்றோர், வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளத்தை பிடித்தம் செய்ய, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால், கருவூல துறையில் உள்ள சிலர், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் சேர்த்து, ஊதிய பட்டியலை அங்கீகரித்தனர்.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை
அடுத்து, தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலர், ஜவஹர், 'வேலை செய்யாத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இதையடுத்து,அனைத்து கருவூல அதிகாரிகளும், தாங்கள் ஏற்கனவே அனுமதித்த ஊதிய பட்டியலை, அந்தந்த துறை தலைவருக்கு அனுப்பி, அவற்றை சரிசெய்து தர அறிவுறுத்தினர். ஆனால், அதற்குள் ஊதிய பட்டியல், வங்கிகளின் பண பட்டுவாடா பிரிவுக்கு சென்றது.இது குறித்து, தகவல் அறிந்ததும், தமிழக அரசின் கருவூல துறை சார்பில், வங்கிக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதில், பண பட்டுவாடாவை நிறுத்த வேண்டும் என்றும், புதிய பட்டியல் வழங்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம், இன்று கிடைக்க வாய்ப்பில்லை. சம்பள பிடித்தத்துடன், அடுத்த வாரம் தான், இந்த மாதத்திற்கான சம்பளம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுக்கு வெற்றிபோராட்டத்தை துவக்குவதற்கு முன்னரே, 'நிதி நிலைமை சரிஇல்லாததால், உங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, போராட்டம் வேண்டாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டது.

அரசை பணிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கின. அதற்கு, சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை.போராட்டத்திற்கு எதிரான மன நிலையில், மக்கள் இருப்பதை அறிந்து, அரசு, தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததுடன், போராட்டத்தை ஒடுக்கும் பணியை துவக்கியது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர், அரசின் கெடுபிடியால், பணிக்கு திரும்பினர்; போராட்டம் பிசுபிசுத்தது. வேறு வழியின்றி, போராட்டத்தை சங்கங்கள் வாபஸ் பெற்றன.இது, அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதேநேரம், போராட்டம் நடக்கும்போதே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நடவடிக்கைக்கு பயந்து, பணிக்கு திரும்பியது, சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் பிசுபிசுப்புஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான, தமிழ்நாடு

Advertisement

தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை, நேற்று ஒரு நாள், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.அதை ஒடுக்க, ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், ஏழு பேர், நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அரசு தரப்பில், பகல், 12:00 மணிக்கு, 91 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.

போராட்டம் வாபஸ் ஏன்?ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், வின்ஸ்டன் பால்ராஜ் அளித்த பேட்டி:

எங்களின், 9 அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, எங்களை அழைத்து பேச வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை அழைத்து பேசவில்லை. முதல்வரின் வேண்டுகோள், பெற்றோரின் மன உணர்வுகள், ஏழை மாணவர் களின் கல்வி நலன் மற்றும் கட்சி தலைவர் களின் வேண்டுகோளை ஏற்று, போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.

இன்று முதல், அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மீண்டும் பணிக்கு செல்ல உள்ளோம். ஆசிரியர்கள் மீதான, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், கைதானோரை விடுதலை செய்து, வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

எங்களுடன் இணைந்த எந்த ஆசிரியருக்கும், சிறுகீறல் கூட இல்லாமல் பார்த்து கொண் டோம். எனவே, போராட்டத்தில் பங்கேற்ற, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து துணை நிற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒருநாள் போராட்டம் இல்லைஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதை ஒடுக்க ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் ஏழு பேர் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.காலை, 10 மணிக்கு முன்னதாகவே ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.காலை, 11 மணிக்கு முதல்வர் தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யில் அனைவரும் பங்கேற்றனர்.

அரசு தரப்பில் பகல் 12:00 மணிக்கு 91 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தொடர் போராட்டத்தை கைவிடுவ தாக அறிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tmb Sibi - Tiruvannamalai,இந்தியா
31-ஜன-201921:08:15 IST Report Abuse

Tmb Sibiஅரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை யாரேனும் அரசு பள்ளிகளில் கல்வி பயில்கின்றனரா? (விதிவிலக்காக லட்சத்தில் யாரோ ஒரு சில அரசு ஆசிரியர் அல்லது ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகள் பயிலாலம், விதி விலக்கு உதாரணமாகது) உங்கள் பிள்ளைகள் படிப்பதெல்லாம் நல்ல தரமான தனியார் கான்வென்ட் அல்லது பிரபலாமான தனியார் பள்ளிகளில் மட்டும் தான். மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என அரசு அறிவித்தாலும் அதையும் எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள். எனெனில் அரசு பள்ளிகளின் நிலையும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை, செயல்பாடுகளும் அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால்தான். பல அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் அரசு ஆசிரியர் பணியை பகுதி நேரமாக வைத்துக்கொண்டு முழு நேர வியாபாரிகளகவும், பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒரு சில அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பினாமியின் பெயரில் பங்குதாரர்களாகவும் இருந்து வருவதும் நிதர்சனம். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு செல்ல வேண்டும், மீண்டும் மாலை குறைந்தபட்சம் 6 மணிக்குதான் வீட்டிற்கு செல்ல முடியும். இதில் பல பள்ளிகளில் இன்னும் மோசான பணி சூழலும் உண்டு. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பணி செய்ய வேண்டிய சூழல். ஆனால் மிகவும் சொற்பமான சம்பளம், வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையும் இதே தான். அங்கு நிர்வாகத்தை எதிர்த்து எதுவும் கேட்க முடியாது. இங்கு சரியாக பணியாற்ற வில்லையென்றாலும், பணியில் எவ்வித சுனக்கம் ஏற்பட்டாலும் வேலையை விட்டு உடனே நீக்கிவிடுவார்கள். சுயமாக வணிகம் அல்லது சுயதொழில் செய்பவர்களின் நிலையோ இன்னும் மோசம். இவர்கள் காலையில் தங்களின் கடைகளுக்கோ, அல்லது தொழில் செய்யுமிடத்திற்கோ சென்றுவிட வேண்டும், நேரத்திற்கு உணவு உறக்கம் எல்லாம் பார்க்கமுடியாது, கடுமையான உழைப்பு, உழைப்பு. மேலும் விடுமுறையும் விட முடியாது. போட்டிகள், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகம், இவற்றையெல்லாம் கடந்துதான் இவர்கள் செய்யும் தொழிலோ அல்லது வனிகத்திலோ கொஞ்சமாவது சம்பதிக்க முடியும். மேலும் விவசாயிகளின் நிலையோ இன்னும் பரிதாபம், விவசாயிகள் படும் பாடெல்லாம் எழுதவோ, சொல்லவோ இங்கு வார்த்தைகளே இல்லை. விவசாயிகளுக்கு தாங்கள் பயிரிடும் பயிர்களில் லாபம் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், நஷ்டம் ஏற்படாமல் இருந்தாலே பெரிய விசயம் என்ற நிலைதான் தற்போது உள்ளது. ஊருக்கு எல்லாம் உணவு வழங்கப்பாடுபடும் விவசாயிகளின் நிலமை இவ்வுளவு கடினம். ஆனால் அரசு ஊழியர்களின் நிலையோ முற்றிலும் வேறு, இவர்களுக்கு எப்படியிருந்தாலும் மிகச்சரியாக மாதசம்பளம் கிடைத்துவிடும். அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ சரிவர பணியாற்றவில்லை என்றாலும், அல்லது பணி செய்வதில் எந்த தவறு அல்லது முறைகேடு செய்தாலும், பணிகளை தட்டிக்கழித்தாலும் அவர்கள் மீது ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுக்கமுடியாது. அப்படியும் எடுத்தால் சங்கங்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு வந்துவிடும். ஏதோ ஒன்று முன்பு சொன்னது போல விதிவிலக்காக மிகப்பெரிய தவறு செய்து, அது ஊடங்களில் வெளிவந்து, அது ஒரு பெரிய செய்தியாக மாறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். அதுவும் பணி மாறுதல், மெமோ, அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் போன்ற சிறிய நடவடிக்கைதான் எடுக்க முடியும். விரைவில் அவர்கள் மீண்டும் பழையபடி பணியில் சேர்ந்துக்கொள்ளாலம். ஊதியம் என்று பார்த்தால் தனியார் நிறுவனங்களைவிட அரசு ஊழியர்களுக்கு பல மடங்கு அதிகம், மேலும் பல சலுகைகள், பல படிகள், பல விடுமுறைகள், வருடம் ஒருமுறை ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, இதுபோததென்று 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பே கமிஷன் எனப்படும் மத்திய ஊதிய ஆணையத்தால் மாற்றியமைக்கப்படும் பெரிய அளவிலான திருத்திய ஊதிய உயர்வு. இவற்றுடன் பல விடுமுறைகள், சலுகைகள், பல படிகள் என ஏராளம் ஏராளம். இவர்கள் ஒய்வுபெரும் வேலையில் இவர்களுக்கு பல சலுகைகளுடன், பல லட்ச ரூபாய் பணப்பலன்களாக கிடைக்கும். இவற்றையெல்லாம் அனுபவிக்கும் இவர்கள் பணிநிறைவு பெற்ற பின்னரும் 2003 ஆண்டுக்கு முன்புவரை வரை அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒய்வூதியம் அளிக்கப்பட்டு வந்தது. இவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஓய்வூதியம் மாதமாத கிடைக்கும், அப்போதும் சில சலுகைகளும் தொடரும். ஒருவேளை ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணை உயிரோடு இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தாலும் இருவருக்கும் ஓய்தியாம் கிடைக்கும். இதனால் ஏற்பட்ட நிதிசுமையை கணக்கில் கொண்டு 2003 ஆண்டுக்கு பின்னர் அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என மத்திய மாநில அரசுகள் அறிவித்து அதை சட்டமாக்கி அமுல்படுத்தியது. தற்போது குறிப்பாக இந்த பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமுல்படுத்தக்கோரிதான் இந்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் தனியார் ஊழியர்கள் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அரசு ஊழியர்கள் மட்டும்தான் அதிகாரப்பூர்வ இந்திய குடிமகன்களா? இவர்கள் மட்டும்தான் வாழத்தகுதியுடையவர்களா? இவர்களுக்கு மட்டும்தான் வயதானல் கடைசி காலத்தில் வாழ வாழ்வாதரம் தேவையா?, அதற்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமாம். ஆனால் மற்ற அனைவரும் எப்படி போனாலும் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவர்கள் செய்யும் போராட்டம் நியாயமானதுதானா? இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சில அரசியல் கட்சிகள் மற்ற பொதுமக்களுக்கோ, அல்லது விவசாயிகளுக்கு இதுபோன்றே குரல் கொடுத்திருப்பார்களா? இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். இந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றால் அவர்கள் பணியிலிருந்து விலகி அவர்களின் தகுதிக்கு எங்கு இன்னும் அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கிறதோ அங்கு சென்று இன்னும் சிறப்பாக பணி செய்யட்டும். இவர்கள் பணியை விட்டு சென்றால், நன்கு படித்த திறமை வாய்ந்த கோடிக்கணக்கான இளைஞர் நம் நாட்டில் கல்வி மற்றும் தகுதிக்கேற்ற வேலையின்றி, பரிதவித்துக்கொண்டு உள்ளனர். தற்போது அரசு ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் மதிப்பு அவர்களுக்கு நன்றாக தெரியும், அவர்களால் இன்னும் சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். இனியொருமுறை எந்த அரசு ஊழியர்களும் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியம் வேண்டும் என போராட்டம் நடத்த முன்வரக்கூடாது. இதை மத்திய மாநில அரசு இவர்களிடம் தெளிவாக எடுத்துசொல்லி இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையெனில் பொது மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இவர்களுக்கு பாடம் புகுட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
31-ஜன-201917:27:06 IST Report Abuse

Santhosh Gopalசுடலைக்கு கவலை

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
31-ஜன-201916:26:24 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஒரே செயல்............மாநிலம் தழுவிய அனைத்து துறைகளும்......அனைத்து சங்கங்களும்......என்ன பில்டப்..........இந்த தமிழன் பழனிச்சாமிக்கு தெரியும் எவ்வளவு பெரிய கூட்டம் என்றாலும் ஒரு பாம்பை கண்டுவிட்டால் கூட்டம் கலைந்து சிதறி ஓடிவிடும் என்று......எனவே அவர் போட்ட அந்த பாம்பு ""விரும்பிய இடங்களுக்கு உடனே இட மாறுதல்"" கூட்டம் சிதறியது கலைந்தது....கூட்ட ஏற்பாட்டாளர்கள் 14 பேர் மட்டுமே வெளியில்......புதன் காலை 8.00 மணிக்கே ஆசிரியர் பள்ளிகளில் ஆஜர்....எனவே அந்த 14 பேரும் கூடி வாபஸ் பெற்றனர்.............

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X