தீர்ப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா? சுப்ரீம் கோரட் நீதிபதி கேள்வி

Updated : ஜன 31, 2019 | Added : ஜன 31, 2019 | கருத்துகள் (35)
Advertisement
புதுடில்லி: 'குறிப்பிட்ட வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்புக்கு, அரசியல் சாயம் பூசுவதை, வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு குற்றஞ்சாட்டுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என, ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி, அருண் மிஸ்ரா கண்டிப்புடன் குறிப்பிட்டார்.தவறாக நடந்து கொள்ளும் வழக்கறிஞரின் பதிவை ரத்து செய்யும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச
தீர்ப்புக்கு,அரசியல் சாயம்,பூசுவதா?, சுப்ரீம் கோரட்,நீதிபதி,கேள்வி

புதுடில்லி: 'குறிப்பிட்ட வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்புக்கு, அரசியல் சாயம் பூசுவதை, வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு குற்றஞ்சாட்டுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என, ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி, அருண் மிஸ்ரா கண்டிப்புடன் குறிப்பிட்டார்.

தவறாக நடந்து கொள்ளும் வழக்கறிஞரின் பதிவை ரத்து செய்யும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, வினீத் சரண் அடங்கிய அமர்வு, அந்த உத்தரவை ரத்து செய்தது.


latest tamil news



அப்போது அமர்வின் சார்பில், நீதிபதி, அருண் மிஸ்ரா கூறியதாவது: அரசியல் தொடர்பான வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்பை எதிர்த்து, வழக்கறிஞர்கள் விமர்சனம் செய்கின்றனர். அரசுக்கு ஆதரவாக அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாக, நீதிமன்றம் செயல்படுவதாக கூறுகின்றனர். வழக்குகளில், நீதிமன்றத்தை விமர்சிக்கும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது.


இது போன்ற குற்றச்சாட்டுகள், நீதித் துறையை அவமதிப்பதாகும். வழக்குகள் விசாரணை மற்றும் தீர்ப்பில், அரசியல் சாயம் பூச வேண்டாம். இது தொடர்பாக, 'பார்' கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், தகுந்த அறிவுரையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
02-பிப்-201917:12:31 IST Report Abuse
kalyanasundaram of late true justice not rendered . treatment of identical cases varies as per the income as well persons.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-201906:12:11 IST Report Abuse
J.V. Iyer எந்த நீதிமன்றமும் இந்து மதத்தை மதித்து அதில் தலையிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-ஜன-201921:37:45 IST Report Abuse
Cheran Perumal சில கட்சிகளின் தலைவர்களின் வழக்குகளில் நீதிமன்றங்கள் மென்மையாக நடந்துகொள்வதை பார்த்து பொதுமக்களும் அப்படிதான் நினைக்கிறார்கள். இவற்றை மாற்ற முதலில் வழி கண்டுபிடியுங்கள். இதற்கு சரியான உதாரணம் சிதம்பரம் குடும்பத்தினருக்கு கோர்ட் அளிக்கும் சலுகைகள் மற்றும் கருணாவை மெரினாவில் புதைக்க உத்தரவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X