பொது செய்தி

இந்தியா

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது

Updated : ஜன 31, 2019 | Added : ஜன 31, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், பரபரப்பான சூழலில் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கி உள்ளது.காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. இன்று துவங்கி, பிப்.,13 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், 2019 - 2020 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள

புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், பரபரப்பான சூழலில் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கி உள்ளது.latest tamil newsகாலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. இன்று துவங்கி, பிப்.,13 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், 2019 - 2020 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை (பிப்.,1) தாக்கல் செய்ய உள்ளார்.


latest tamil news16 வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த மசோதா, என்ஆர்ஐ.,கள் இந்திய தேர்தலில் ஓட்டளிக்க வழிவகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர தனிநபர் மசோதாக்கள் சிலவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. தனிநபர் மசோதா மீதான விவாதம் பிப்.,8 அன்று நடைபெற உள்ளது. இருப்பினும் வழக்கம் போல் ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி இருஅவைகளிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hariharan - Madurai,இந்தியா
31-ஜன-201910:51:57 IST Report Abuse
hariharan நல்ல ஒரு விவாதத்தை நாடாளுமன்றத்தில் பார்த்து வெகு வருடங்கள் ஆகிவிட்டன.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
31-ஜன-201909:34:54 IST Report Abuse
A.George Alphonse As usual walkouts , disturbing the proceedings by the opposition parties and frequently postponement of sessions of Parliament by speaker till of the Parliament Thodar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X