தேடி வந்து உணவு தரும் ரோபோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தேடி வந்து உணவு தரும் ரோபோ!

Added : ஜன 31, 2019
தேடி வந்து உணவு தரும் ரோபோ!

இது எதிர்பார்த்தது தான். விரைவில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆறு சக்கர ரோபோக்கள் உணவு வினியோகம் செய்யவிருக்கின்றன.

ஸ்டார்ஷிப் டெக்னாலஜீஸ் உருவாக்கியுள்ள இந்த ரோபோக்களை, உணவு டெலிவரிக்கு பயன்படுத்த, அப் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள உணவகங்கள் பல ஒப்புக்கொண்டுள்ளன.

அவற்றின் உணவுப் பட்டியலைக் கொண்ட செயலி மூலம் வேண்டியதை மாணவர்களும் பேராசிரியர்களும் தேர்ந்தெடுத்தால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு, இந்த ரோபோக்கள் உணவுடன் வந்துவிடும்.

டெலிவரிக்கு, 150 ரூபாய் கட்டணத்தையும், உணவுக்கான கட்டணத்தையும் செயலி மூலம் செலுத்தினால், பெட்டி வடிவிலிருக்கும் ரோபோவின் மூடியைத் திறந்து, உணவை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, நம்மூரில் 'ஸ்விக்கி'காரர்கள் செய்வதை, ஸ்டாஷிப்பின் ரோபோக்கள் செய்யப்போகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X