சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவில் சீன ஊர்தி!

Added : ஜன 31, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மனிதன் கடைசியாக நிலாவில் கால்வைத்து, 50 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, நிலாவின் வளங்களை ஆராய்ந்து வர, 2022ல் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கென ஸ்பெயினில் உள்ள, லான்சாரோட் என்ற இடத்தில் நிலா மீது நடப்பது, அங்கு கருவிகளை கையாள்வது, நிலாவின் தரை வளங்களை தோண்டி ஆராய்வது போன்றவற்றுக்கு, விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகளை
நிலாவில் சீன ஊர்தி!

மனிதன் கடைசியாக நிலாவில் கால்வைத்து, 50 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, நிலாவின் வளங்களை ஆராய்ந்து வர, 2022ல் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதற்கென ஸ்பெயினில் உள்ள, லான்சாரோட் என்ற இடத்தில் நிலா மீது நடப்பது, அங்கு கருவிகளை கையாள்வது, நிலாவின் தரை வளங்களை தோண்டி ஆராய்வது போன்றவற்றுக்கு, விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகளை தந்து வருகிறது.

அமெரிக்காவின் அப்போலோ நிலா திட்டத்திற்கு உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகள் உதவும் என்றாலும், அமெரிக்கர்கள் நிலாவுக்குப் போய் வந்து இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டதால், ஐ.எஸ்.ஏ., புதிய பயிற்சி உத்திகளையும், நவீன கருவிகளையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

நிலாவில் பூமியின் புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான் இருக்கிறது. எனவே, நிலாவில் வெகுதுாரம் நடப்பது, தரையை தோண்டுவது போன்றவை, ஐரோப்பியர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதற்கான நவீன பயிற்சி முறைகளையும் ஆய்வுக்கூடங்களில், ஐ.எஸ்.ஏ., தர ஆரம்பித்துள்ளது.

நிலாவில் வீரர்கள் அணிந்துள்ள உடை, விண்வெளி வீரர்களின் அசைவுகளை கட்டுப்படுத்தும். சட்டென்று குனியவோ, மண்டியிடவோ முடியாது.

கையுறைகள் அணிந்திருப்பதால், கருவிகளை துல்லியமாக கையாள, நிறைய பயிற்சிகள் தேவை.இதை ஈடுகட்ட, ஐ.எஸ்.ஏ., 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கும் கேமரா முதல், நுண் நோக்கி வரை வீரர்கள் நிலாவில் சுமந்து செல்வர்.

தவிர, நிலாவில் கிடைக்கும் தாதுக்கள், மண் குறித்து விண்வெளி வீரரின் சந்தேகங்களை போக்க, பூமியில் ஒரு நிலவியல் வல்லுனரின் நேரடித் தொடர்பும் ஏற்படுத்தித் தர, இ.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamalarathinam M - Coimbatore,இந்தியா
06-பிப்-201914:53:05 IST Report Abuse
Kamalarathinam M This will not be good for future generation. If they play with nature, terms will come to show its reactions...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X