பொது செய்தி

இந்தியா

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு

Updated : பிப் 01, 2019 | Added : பிப் 01, 2019 | கருத்துகள் (75)
Advertisement

புதுடில்லி: தனி நபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் கோயல் கூறுகையில், ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட தேவையில்லை. நிரந்தர வரி கழிவு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 3 கோடி பேர் பயன்பெறுவார்கள்.


ஒட்டுமொத்த வரி சலுகை மூலம் ரூ.6.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், அவர்கள் வரி கட்ட தேவையில்லை. டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி பிடித்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-பிப்-201911:00:07 IST Report Abuse
S.Baliah Seer சென்ற சில ஆண்டுகளில் 87A -க்கு கீழ் செலுத்த வேண்டிய வருமான வரியில் 5000 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.அதாவது ஒருவர் வருமானம் 5 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய வருமான வரி ரூபாய் 12500 ஆகும்.2017 -இல் அவர் 7500 ரூபாய் வருமான வரி கட்டினால் போதும்.ஆனால் 2018 பட்ஜெட்டில் அந்த 5000 ரூபாய் தள்ளுபடியை நிறுத்தி விட்டார்கள்.அதனால் தற்போது 12500 ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும். 2020 -2021 AY -ரில் இந்த 12500 ரூபாயை 87A .க்கு கீழ் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.அதாவது உண்மையில் 7500 ரூபாய் வருமான வரியில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.மற்றபடி வருமான வரியில் எந்தவித மாற்றமில்லை .இதற்கு ஏகப்பட்ட களேபாரம்.
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
02-பிப்-201912:01:50 IST Report Abuse
rajangam ganesanகரெக்ட் basheer ali...
Rate this:
Share this comment
Cancel
Muthukumar - Chennai ,இந்தியா
01-பிப்-201920:59:47 IST Report Abuse
Muthukumar 5 லட்சம் வரி இல்லை என்று சொல்லி விட்டு GST என்ற வரி மூலமாகவும் மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றி கொண்டு மறைமுகம் வரி மூலம் ஏழைகளை இந்த பாரதிய ஜனதா கட்சி நன்றாக ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Mirattal Adi - Chennai,இந்தியா
02-பிப்-201910:16:38 IST Report Abuse
Mirattal AdiVAT னு வரி இருந்த போது நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க. அது போக 2.5 லட்சத்திற்கு காங்கிரஸ் காலத்தில் 10% வரி. தயவு செய்து இதை எல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
01-பிப்-201920:16:20 IST Report Abuse
Darmavan விவசாயிகளின் (சிறு/குறு)இழப்பீட்டுத்தொகையை 24000 /- (மாதம் 2000 /- ) வரை உயர்த்தியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X