அவமானம்: பட்ஜெட் பற்றி ராகுல்

Updated : பிப் 02, 2019 | Added : பிப் 01, 2019 | கருத்துகள் (125)
Advertisement

புதுடில்லி : பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.17 தருவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுல்: மரியாதைக்குரிய பிரதமருக்கு, 5 ஆண்டுகள் உங்களின் தகுதியின்மை மற்றும் அகங்காரம், நமது விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டது. அவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.17 தருவது என்பது, அவர்களையும், அவர்களது பணியையும் அவமானப்படுத்தும் செயல்.
தேர்தல் பட்ஜெட்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: இது தேர்தல் பட்ஜெட். விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், தேர்தலை கருத்தில் கொண்டே சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.


மக்களின் முன்னேற்றத்திற்காக...

பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நிதி அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உற்சாகம் உருவாகும். அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த பட்ஜெட் உதவும். விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisementவிவசாயிகளுக்கு இதுபோல், எந்த அரசும் சலுகை வழங்கியது இல்லை. இந்த பட்ஜெட்டால், 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு ரூ.6000 தொகையானது 2018 டிசம்பர் மாதத்தை முன்தேதியிட்டு வழங்கப்படும்.முந்தைய ஆட்சியில் திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. ஆனால், எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு அதிக கடன்களை மோடி அரசு வழங்கி உள்ளது. ஏசி அறையில்அமர்ந்துள்ள சிலருக்கு விவசாயிகளின் கவலை புரியாது. இதனால், தான் பிரதம மந்திரி கிசான் சமன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று பூர்வமான முடிவாகும்.


சிறப்பு மிக்க பட்ஜெட்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் : வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது.வாழ்த்து

அருண் ஜெட்லி கூறியதாவது: சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்த பியுஷ் கோயலுக்கு வாழ்த்துகள். இந்த பட்ஜெட், வளர்ச்சி, விவசாயிகள், ஏழைகளுக்கு ஆதரவானது என்பதில் கேள்வியே இல்லை. இந்திய நடுத்தர வர்க்கத்தினர்,வாங்கும் சக்தியை பலப்படுத்தி உள்ளது.
விவசாயிகள் பயன்

பா.ஜ., தலைவர் அமித்ஷா: விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில், பிரதமர் கிசான் சமன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கடன் வாங்காத விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.


உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் : விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் உள்ளது. புதிய இந்தியா கனவை எட்டுவதற்கு இந்த பட்ஜெட் உதவிகரமாக இருக்கும்.போலி விவரங்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் : போலியான புள்ளி விவரங்களை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் திட்டம் காரணமாக வாராக்கடன் அதிகரித்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைச்சர் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை, ஓட்டுக்காக வழங்கப்பட்ட தொகை.


காங்., எம்.பி., சசிதரூர் : ஒட்டுமொத்தமாக பார்த்தால் மட்டமானது. ஆனால் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது நல்ல விஷயம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி என்றால் மாதத்திற்கு ரூ.500 ஆகும். ஒருவர் கவரவமாக, கண்ணியத்துடன் வாழ்வதற்கு மாதத்திற்கு ரூ.500 என்பது எப்படி போதுமானதாக இருக்கும்.எதிர்க்கட்சிகளுக்கு கவலை

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: இது தேர்தல் பட்ஜெட் அல்ல. எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கின்றனர். ஆயுஸ்மான் பாரத் திட்டம் கொண்டு வரப்பட்ட போது தேர்தல் வரவில்லை. காங்கிரஸ், பிரதிபலன் எதிர்பாராமல் எதையும் செய்தது இல்லை. பட்ஜெட்டை பார்த்து மற்றவர்களுக்கு தேர்தல் கவலை ஏற்பட்டு உள்ளது. இது, மக்கள் நலனுக்கான பட்ஜெட். இதனை பார்த்து எதிர்க்கட்சிகள் சோர்வடைந்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் இ.பி.எஸ்., வரவேற்பு

முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதும், 2022க்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவதும், கிராமப்புற சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் வரவேற்கத்தக்கது. மக்களுக்கு நன்மை செய்வது அரசின் கடமை. வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே. பட்ஜெட்டில் திட்டத்தை அறிவித்தால், தேர்தலுக்காக என்கிறார்கள். அறிவிக்காவிட்டால், ஒன்றும் இல்லை என்கின்றனர்.


திமுக எம்.பி., கனிமொழி : மத்திய பட்ஜெட் என்பது குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போன்றது. எனினும் முடிவை சிறப்பாக முடிக்க வேண்டும் என மத்திய அரசு எண்ணுகிறது. ஆனால் காலம் கடந்து விட்டது.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் : மத்திய பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சரகம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

Advertisement
வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
07-பிப்-201919:35:19 IST Report Abuse
chander இது தேர்தலுக்கான பட்ஜெட் என்பது உண்மை ஆட்சிக்கு வந்ததும் இதை சொல்லியிருக்கலாமே இதையும் மாற்ற மாட்டீர்கள் என்பதில் என்ன நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
07-பிப்-201914:26:02 IST Report Abuse
Gnanam ராகுல் சொல்லுகிறார் ஒரு நாளுக்கு பதினேழு ரூபாயில் என்ன செய்வது என்று, அடுத்து சசி தரூர் சொல்லுகிறார் ஐநூறு ரூபாயில் ஒருமாதம் கண்ணியமாக வாழமுடியாது என்று. இவர்களுக்கு தெரியாதா இது விவசாயிகளுக்கு அதிகப்படியாக கொடுத்துதவும் ஊக்கத்தொகை என்று? இந்த பதினேழு அல்லது ஐநூறு இல்லாமலே அவர்கள் வாழத்தான் செய்கிறார்கள். இது அவர்களுக்கு சற்று உதவித்தொகையாக ஊக்கமளிக்கும். நீங்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கும்பல். உங்களைப்போல் லக்ஷக்கணக்கில் சம்பாதிக்கவும், செலவு செய்யவும் அவர்களால் இயலாது. இந்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் குவிந்திருக்கும் பொக்கிஷத்தை சற்று விவசாயிகளுக்கு கொடுத்துதவலாமே?
Rate this:
Share this comment
Cancel
02-பிப்-201919:29:15 IST Report Abuse
ஆப்பு ஃப்ரீயா குடுத்தா எவ்வளவு குடுத்தாலும் வாங்கிக்கணும். Beggars cannot be choosers. மோடியானாலும் சரி, ராகுலானாலும் சரி குடுக்கிறதை வாங்கிட்டு போவணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X