சென்னை : போலீஸ்காரர் முகத்தில், 'பெப்பர் ஸ்பிரே' அடித்து தப்பிய கார்திருடனை கைது செய்ய உதவிய, ஆட்டோ ஓட்டுனருக்கு, போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருபவர், விஜயகாந்த். அவர், ஜன.,31ல், வேளச்சேரி தண்டீஸ்வரன் நகர் பிரதான சாலையில்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய மர்ம நபர், விஜயகாந்த் முகத்தில், 'பெப்பர் ஸ்பிரே' அடித்து, தப்பினார்.
கண் எரிச்சல் இருந்தபோதும் விஜயகாந்த், அவ்வழியாக ஆட்டோ ஓட்டி வந்த, அதேபகுதியைச் சேர்ந்த, மோகனசுந்தரத்திடம் கூறி உள்ளார். இருவரும், காரைதுரத்திச் சென்று, சைதாப்பேட்டையைச் சேர்ந்த, சுந்தராஜ், 35, என்பவனை பிடித்தனர். விசாரணையில், அவன், கார் திருடன் என்பதும், கோயமுத்துாரில், கொலை மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
குற்றவாளியை பிடிக்க உதவிய, ஆட்டோஓட்டுனர், மோகனசுந்தரத்தை, அலுவலகத்திற்கு நேற்று நேரில் வரவழைத்து, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், அவரை பாராட்டி, சான்றிதழ் அளித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement