அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓட்டாக மாறுமா, 1,000 ரூபாய் பரிசு?
ரேஷன் கடைகளில் அ.தி.மு.க., 'சர்வே'

பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் வழங்கியது, லோக்சபா தேர்தலில், ஓட்டுக்களாக மாறுமா என, ரேஷன் கடைகளில், அ.தி.மு.க.,வினர், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.

ஓட்டாக மாறுமா, 1,000 ரூபாய் பரிசு? : ரேஷன் கடைகளில் அ.தி.மு.க., 'சர்வே'விரைவில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதனுடன், தமிழகத்தில், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க., ஆட்சி நீடிக்கும். இதனால், எப்படியும் வெற்றி பெற, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா, முதல்வராக இருந்த போது, கடலோர மாவட்டங்களை, 2004ல், சுனாமி தாக்கியது. சென்னையில்,

2005ல், கன மழையும் பெய்தது. இதையடுத்து, இடத்தில் கூட வெற்றிரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 4,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களுடன், 4,000 ரூபாய் ரொக்கம் என, மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் தான், 2004 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஒரு பெறாத நிலையிலும், அக்கட்சி, 2006 சட்டசபை தேர்தலில், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றி பெற்று, பலமான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
ஆட்சியை பிடித்த, தி.மு.க.,விற்கு, 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை.தற்போது, ஜெயலலிதா மறைவாலும், தினகரன் கட்சியாலும், அ.தி.மு.க., ஓட்டுகள் குறைந்து உள்ளன. இது, எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு சாதகமாக அமையும் என, தெரிகிறது. அதை தடுக்க, 2006 தேர்தலை போல், தோல்வி கிடைத்தாலும், படுதோல்வி அடையக் கூடாது என, அ.தி.மு.க., கருதுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், தமிழக அரசு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, முதல்வர்,

Advertisement

இ.பி.எஸ்., பெயர், அனைத்து மக்களையும் சென்றடைந்து உள்ளது.
அது, ஓட்டுகளாக மாறுமா என்பதற்காக, ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம், 'லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என, கேட்குமாறு, ஊழியர்களிடம், கூட்டுறவு சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ள ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். அதன்படி, அவர்களும், மக்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் மன நிலையை கேட்கின்றனர். கருத்து தெரிவித்த பலரும், 'எங்கள் பணத்தை எங்களுக்கு, அரசு கொடுத்தது; யாருக்கு ஓட்டு என்பதை, தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்' என்று தான் கூறியுள்ளனர். இதனால், மக்கள் மனநிலையை அறிவதில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-பிப்-201918:57:03 IST Report Abuse

Natarajan Ramanathanதமிழகத்தின் காவேரி, நீட், மேகதாது, ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழி சாலை, புதிய நிதி கமிஷன், மீத்தேன் என்று தமிழக உரிமைகளை..........இதில் 1)காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது 2) நீட் அனைத்து மாநிலமும் ஏற்றுக்கொண்ட மருத்துவ படிப்பில் கொள்ளை அடிப்பதை தடுத்த நல்லதிட்டம். 3) மேகதாது கட்டினாலும் நமக்கு வேண்டிய தண்ணீர் காவிரி ஆணையம் தரும் 4) ஸ்டெர்லைட் திறக்கப்பட்டு தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருக வேண்டும் 5) சேலம் எட்டுவழி பாதை கைவிடப்பட்டு ஒத்தையடிப்பாதையே போதும் என்றாகி விட்டது.6) புதிய நிதி கமிஷன் இந்தியா முழுமைக்குமான ஒன்று 7) மீத்தேன் திட்டமும் அம்பேலாகி விட்டது. மத்திய அரசு நன்றிகெட்ட தமிழ் நாட்டுக்கு இன்னும் என்னதான் செய்ய வேண்டும்?

Rate this:
Anandan - chennai,இந்தியா
06-பிப்-201907:47:04 IST Report Abuse

Anandanதமிழகம் எப்போதுமே தாய்வழியில் சிந்திக்கும் மாநிலம், ஹிந்தி எதிர்ப்பை இப்போது பலமாநிலங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. நீட் தேர்வு நம் மாநிலத்தின் இடங்களை அடுத்தவர்களுக்கு தாரை வார்க்கிறது. நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி எடுக்கவேண்டும். சிலர் 12 வகுப்பிற்கு பிறகு ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து தேர்வாகின்றனர். இதுவா நல்ல தேர்வு முறை? ஸ்டெர்லிட் உயிருக்கு உலை வைக்கிறது அதில் வேலை வாய்ப்பு இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? சேலத்தில் இருந்து 8 வழி பாதை முதலில் தேவையா அதற்க்கு அவ்வளவு மரங்களை அழித்து உருவாக்க வேண்டுமா? அதனால் பலனடையப்போவது யார்? சோறு போடும் வயல்வெளிகளை அழித்து மீத்தேன் திட்டம். மூடர்கள் மட்டுமே ஆதரிப்பார் உங்கள் கொள்கைகளை. ...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
03-பிப்-201917:14:48 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்எடப்பாடியார் மக்களின் பணம் என்று மக்களுக்கே கொடுத்தார்......ஆனால் மக்களில் பலர் கனிமொழி மற்றும் சசிகலாவின் சாராய கம்பெனிகளின் லாபத்தை கூட்ட உதவிசெய்துள்ளனர்......

Rate this:
Anandan - chennai,இந்தியா
06-பிப்-201907:47:43 IST Report Abuse

Anandanசசிகலா குடும்ப கம்பனிக்கு எதுவுமே செல்லவில்லையா? ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-பிப்-201915:13:46 IST Report Abuse

Pugazh Vஇந்த1000 ரூபாய் எங்கள் பணம் எங்களுக்கு தந்தார் இதுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும் மக்களின் தெளிவான சிந்தனை கண்டு பயந்து அதிர்ந்து.போனவர்கள் தான், இந்த மக்களை டாஸ்மாக் / குக்கர் / டோக்கன் என்று அவமரியாதையாக எழுதுகிறார்கள்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X