வரும், 11ம் தேதி, தன் மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அரசியல் பணிகளில், நடிகர் ரஜினி, தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.
அதேநேரத்தில், 'லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்ந்து வந்தால், புதுக்கட்சி அறிவிப்பை, அவர் உடனே வெளியிடுவார்; லோக்சபா தேர்தல் மட்டும் தான் என்றால், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவையே எடுப்பார்' என, ரஜினி தரப்பில் சொல்லப்படுகிறது.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், 11ம் தேதி, சென்னை, லீலா பேலஸ் ஓட்டலில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. முன்னணி மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடி, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரது சகோதரர், பல்லடம் முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., அவர், எப்போது கட்சி
மறைந்த பொன்முடி. மணமகனின் தாய்மாமாவும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான சொர்ணா சேதுராமன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர். இப்படி, தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் பின்னணி உள்ள, முக்குலத்தோர் சமுதாய குடும்பத்தில், ரஜினி சம்பந்தம் செய்கிறார் என்பதால், அவரது அரசியல் பிரவேசம், மகள் திருமணத்திற்கு பின் தீவிரம் எடுக்கும் என, ரசிகர்கள் கருதுகின்றனர்.அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: மகள் திருமணம் முடிவடைந்ததும், தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்க, ரஜினி முடிவு செய்துள்ளார். குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 11 பேரின் தகுதி நீக்க வழக்கில், என்ன தீர்ப்பு வரப் போகிறது என்பதையும் எதிர்பார்த்துள்ளார். அந்த தீர்ப்பின் வாயிலாக, அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு, சட்டசபை, லோக்சபா தேர்தல் ஒன்றாக வருமானால், உடனே, கட்சி அறிவிப்பை வெளியிட்டு, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய, தன் டில்லி நண்பர்களை, தயார் நிலையில் வைத்துள்ளார். லோக்சபா தேர்தல் மட்டும் வருமானால், பா.ஜ., - காங்கிரஸ் ஆகிய, இரு கட்சிகளையும் பகைக்க விரும்பாமல், 'யாருக்கும் ஆதரவு இல்லை' என்ற, நிலைப்பாட்டை எடுக்கவே விரும்புகிறார். அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ரஜினி ஓர் அறிக்கை வெளியிட உள்ளார். அதில், 'லோக்சபா தேர்தலில், யாருக்கும் ஆதரவு இல்லை. ரசிகர்கள், மனச்சாட்சிப்படி ஓட்டுக்களை பதிவு
செய்யுங்கள். ஆனால், எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக, தேர்தல் பணிகளில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக் கூடாது. 'சட்டசபை தேர்தலை, நாம் சந்தித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதுவரை, மக்கள் பணிகளில் ஈடுபடுங்கள்' என, தெரிவிக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மன்றத்தில் உற்சாகம்! :
சமீபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின், ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகி இளவரசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடுகள் பற்றி, தொடர்ந்து புகார்கள் வந்ததால், ரஜினி நடவடிக்கை எடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, 'இனிமேல், மன்ற கோஷ்டி பூசல் விவகாரம் எதுவானாலும், என் நேரடி கவனத்திற்கு வர வேண்டும். எந்த ஒரு தொண்டரையும், மன்றத்திலிருந்து நீக்கக் கூடாது' என, மன்ற நிர்வாகிகளுக்கு, ரஜினி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், மக்கள் மன்றத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (55)
Reply
Reply
Reply