கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.ஏ.எம்.ராமசாமி சொத்துக்கு சேதம் வழக்கில் வளர்ப்பு மகன் மனு தள்ளுபடி

Added : பிப் 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:மறைந்த தொழில் அதிபர், எம்.ஏ.எம்.ராமசாமியின் சொத்துக்கு, சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக் கோரிய, வளர்ப்பு மகனின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல தொழில் அதிபர், எம்.ஏ.எம்.ராமசாமி; பல்வேறு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். முத்தையா என்பவரை, சுவீகாரம் எடுத்தார். அவரும், சில நிறுவனங்களை கவனித்து வந்தார்.ஒரு கட்டத்தில், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும், வளர்ப்பு மகன் முத்தையாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.சென்னை, எம்.ஆர்.சி., நகரில், ராமசாமிக்கு சொந்தமான நிலத்தில், சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கு இருந்த பாதுகாவலரிடம் சாவி, மொபைல் போனை பறித்து, மிரட்டல் விடுத்ததாக, பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.2015 பிப்ரவரியில், இந்த சம்பவம் நடந்தது.

வளர்ப்பு மகன் முத்தையா, 'செட்டிநாடு செக்யூரிட்டி சர்வீசஸ்' நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அழகு ஆகியோருக்கு எதிராக, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லாததால், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், செட்டிநாடு அரண்மனையின் பொறுப்பாளர் முத்துவெள்ளையன், புகார் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, அவரது வாக்குமூலம் மற்றும் பாதுகாவலரின் வாக்குமூலத்தை பதிவு செய்து, போலீஸ் விசாரணைக்கு, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.விசாரணைக்குப் பின், போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு எடுத்து, முத்தையாவுக்கு, 'சம்மன்' அனுப்ப, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சம்மன் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், முத்தையா மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு எதிராக, பாதுகாவலர் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த போது, அங்கு இருந்ததால், புகார் அளிக்க, அவருக்கு உரிமை உள்ளது. சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலத்தை, மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார்.அதனால், வழக்கை விசாரணைக்கு எடுத்து, சம்மன் அனுப்பிய, மாஜிஸ்திரேட் உத்தரவில் தவறு இல்லை.

இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மேற்கொண்டு விசாரணையை தொடரலாம். குற்றச் சாட்டுக்கள் பதிவுக்கு பின், மனுதாரர், சட்டப்படி நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-பிப்-201912:13:28 IST Report Abuse
Devanatha Jagannathan வளர்த்த கடா மார்புல பாயுது என்பது இது தானோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X