சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கொடுங்க காதல் ஜோடி தஞ்சம் !

Added : பிப் 03, 2019
Advertisement
 பாதுகாப்பு கொடுங்க காதல் ஜோடி தஞ்சம் !

பேரூர்:கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பேரூர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று தஞ்சமடைந்தது.சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெயலட்சுமி மகள் மோகனசுந்தரி,21. தந்தை இறந்து விட்டார். பேரூர் அடுத்துள்ள குப்பனுார், அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுப்ரமணி மகன் சுபாஷ், 24, என்பவரை காதலித்தார்.நேற்று முன்தினம், ஒத்தக்கால் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், பாதுகாப்பு கோரி, பேரூர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று தஞ்சமடைந்தனர்.போலீசார், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்ணின் சித்தப்பா, போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்தார்.அவரை மீட்ட உறவினர்கள், பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மணமகனுடன், குறிப்பிட்ட அமைப்பினர் மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்கள் வந்திருந்ததால், போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் கூறுகையில், 'இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், பாதுகாப்பு கோரி வந்தனர். பெண் மேஜர் என்பதால், கணவனுடன் அனுப்பி வைத்தோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X