சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

Added : பிப் 03, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சாவூர்:தஞ்சை அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்த, மனைவி உட்பட நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், மாரநேரிவாரியேந்தலைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி இளஞ்செழியன், 28, மனைவி ரேவதி, 28. இவர்களுக்கு, 6 வயதில் மகன் உள்ளான்.இளஞ்செழியன் தன் நண்பனான இளவாளன், 26, என்பவனை அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரேவதிக்கும், இளவாளனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2017ல் இளஞ்செழியன் வேலை காரணமாக, மதுரைக்கு சென்று விட்டதால், ரேவதிக்கும், இளவாளனுக்கும் நெருக்கம் அதிகமானது.

விடுமுறையில், வீட்டுக்கு வந்த இளஞ்செழியனிடம், இளவாளன் அடிக்கடி வீட்டிற்கு வருவதாக, அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது பற்றி கேட்ட போது, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், இளஞ்செழியன் மதுரைக்கே சென்று விட்டார்.

மனு தாக்கல்

கடந்த, 2018 ஜனவரி யில், ரேவதி போன் செய்து, 'இனிமேல் சண்டை போடாமல் சேர்ந்து வாழலாம்' என்று கூறியதால், இளஞ்செழியன் தஞ்சைக்கு வந்து உள்ளார்.அதே மாதம், 13ல் இளஞ்செழியன், தன் நண்பன் இளவாளன் மற்றும் கலிய பெருமாள், 26, என்பவனுடன், மது அருந்தினார். அப்போது, ரேவதி, இளவாளன், கலியபெருமாள் ஆகியோர், இளஞ்செழியனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின், இளஞ்செழியன் உடலை போர்வையில் சுற்றி, ஆட்டோவில் எடுத்துச் சென்று, வல்லம், மின்னாத்துார் ஏரி அருகே யுள்ள தண்ணீர் வடிகால் குழாயில், புதைத்து விட்டனர்.

மகன் வீட்டிற்கு வராமல் இருந்ததால், கடந்த நவம்பர், 25ல், இளஞ்செழியனின் தாய் தங்கம்மாள், அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். போலீஸ் தரப்பில், எவ்வித பதிலும் கிடைக்காததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார், தங்கம்மாள்.

பரிசோதனை

உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, அம்மாபேட்டை போலீசார், இளஞ்செழியன் மொபைல் போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரித்தனர். மேலும், இளஞ்செழியன் மனைவி ரேவதியிடம் விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்து, உடலை வடிகால் குழாயில் புதைத்து வைத்தது தெரிய வந்தது.இதையடுத்து, எலும்புக் கூடாக இருந்த உடலை எடுத்து, சம்பவ இடத்திலேயே போலீசார் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து ரேவதி, இளவாளன், கலியபெருமாள், ஆட்டோ டிரைவர், மணி ஆகிய நான்கு பேரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
04-பிப்-201919:17:37 IST Report Abuse
VSK இதையெல்லாம் பார்க்குபோது , மனம் ஒத்துவரவரவில்லையானால் , விவாகரத்து கூறி விடுபடுவதே வழி சவுந்தர்யா- aSvin போன்றோர் செய்ததுதான் சரியான தீர்வு
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
04-பிப்-201917:15:45 IST Report Abuse
TechT கற்பழிப்பு குற்றவாளியை தூக்கிலிடுங்கள், அத்தேர் போல இந்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவும். இப்போது பெண்ணுரிமை பேசுவோர் எங்கே ??
Rate this:
Share this comment
anonymous - nagercoil,இந்தியா
06-பிப்-201914:25:15 IST Report Abuse
anonymousஎந்த ஆண்களும் கள்ள தொடர்பு வைக்க வில்லையா? எதற்காக பெண்ணுரிமையை இந்த செய்தியோடு தொடர்பு படுத்துறீங்க...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-பிப்-201914:36:49 IST Report Abuse
தமிழ்வேல் போலீஸுங்க பக்கத்துவீட்டில கூட விசாரிக்கலியா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X