சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைவிட்ட பிள்ளைகள் பெற்றோர் தற்கொலை

Added : பிப் 03, 2019
Advertisement

கோவை:பிள்ளைகள் கவனிக்காததால், மனமுடைந்த வயதான பெற்றோர், தற்கொலை செய்து கொண்டனர்.கோவை, சிவானந்தபுரம், மணி நகரை சேர்ந்தவர் பழனிசாமி,64. இடுப்பு வலி காரணமாக, நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து, கிடைக்கும் வேலையை செய்து வந்தார். மனைவி காளியம்மாள்,60. இவர்களுக்கு, 3 மகள்கள், ஒரு மகன். நான்கு பேருக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசிக்கின்றனர்.பெற்ற பிள்ளைகள் கவனிக்காத நிலையில், காளியம்மாள், பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். போதிய உணவு கிடைக்காமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விரக்தியடைந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சரவணம்பட்டி போலீசார், சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மற்றொரு சம்பவம்: பேரூர், வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்,75; கூலி தொழிலாளி. மனைவி நஞ்சம்மாள்,68. மகன் கார்த்திக்,39; இவரது மனைவி பிரிந்து சென்றதால், பெற்றோருடன் வசித்தார்.நேற்று காலை, பெற்றோரை பார்த்தபோது, வாயில் நுரையுடன் கிடந்துள்ளனர். பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இருவரும் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X