பொது செய்தி

இந்தியா

பாலிவுட் நடிகர்களுக்கு நேரமிருக்கிறது: தமிழ் நடிகர்களுக்கு இல்லாதது ஏனோ?

Added : ஏப் 07, 2011 | கருத்துகள் (199)
Share
Advertisement
ஹசாரேயில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு அமிர்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் என, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில், சினிமா ஷூட்டிங்கிலும், அரசியல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் நடிகர்களின் இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களை கொதிப்படைய
பாலிவுட் நடிகர்களுக்கு நேரமிருக்கிறது: தமிழ் நடிகர்களுக்கு இல்லாதது ஏனோ?

ஹசாரேயில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு அமிர்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் என, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில், சினிமா ஷூட்டிங்கிலும், அரசியல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் நடிகர்களின் இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது.


ஹசாரேவுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு: லஞ்ச ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேவுக்கு, நாடு முழுவதும் பலத்த ஆதரவு அலை வீசி வருகிறது. டில்லியில், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர், தங்கள் கையில் மெழுகுவத்தி ஏந்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுபோல், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இ.கம்யூ., பரதன் உள்ளிட்ட அரசியல் கட்சியத் தலைவர்களும், ஹசாரேவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பரபரப்பாக பேசப்படும் இந்த சூழலில், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் பலரையும் தட்டிஎழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பல்வேறு சமூக அமைப்பினரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த முன்வந்துள்ளனர்.


மத்திய அரசுக்கு பரதன் கோரிக்கை: சென்னையில் நிருபர்களிடம் பேசிய இ.கம்யூ., பொதுச்செயலாளர் பரதன், ஊழலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என, டில்லியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். கடந்த 42 ஆண்டுகளாக, ஊழலைத் தடுப்பதற்கான, "லோக்பால்' மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சமூக சேவகரின் கோரிக்கையை, உடனே மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


உலகெங்கும் குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் அன்னா ஹசாரேவுக்கு, உலகெங்கிலும் இருந்து ஆதரவு குவிகிறது. "தினமலர்' இணையதளத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


ஆதரவு தெரிவித்துள்ள வாசகர்கள் சிலர் கருத்துக்கள்:


ராஜா, துபாய்: ஹசாரே, நீங்கள் கொடுத்த இந்த தீப்பொறி கொழுந்து விட்டு எரியும் நாள் வெகு விரைவில். ஒரு பிரகாசமான இந்தியா உண்மையில் ஒளிரப்போகுது. விடியலை எதிர்பார்க்கும் ஒரு அயல்நாட்டு இந்தியன்.


எஸ்கலின் ஜோ, அமெரிக்கா: அன்னா ஹசாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். காசு அல்லது இலவசங்களை கொடுக்கும் அரசியல்வாதிகளும், அதை வாங்கி ஓட்டுப் போடும் மக்களும் திருந்த வேண்டும். ஹசாரேவின் இந்த முயற்சி சிலரை மாற்றுமேயானால், நமது இந்திய நாட்டுக்கு விடிவுகாலம் துவங்கிவிட்டது என்று தான் அர்த்தம்.


தாஸ் ஆரோ, சிங்கப்பூர்: பூனை கழுத்தில் யார் மணி கட்டுவது என்ற நிலை மாறி, இன்று ஒரு தன்னலமில்லா தலைவன் போராடுகிறான். இத்தகைய புரட்சியாளனுக்கு எமது முழு ஆதரவு எப்போதும் உண்டு.


ராஜசேகரன், ஐதராபாத்: இந்திய நாட்டுக்காக, உண்மையாக போராடுபவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. ஹசாரே, உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். தளர்ந்துவிடாதீர்கள். ஜெய்ஹிந்த்....


சந்துரு ராஜா, டில்லி: சிறிய அளவில் ஹசாரே பின்னால் கூடிய கூட்டம், இன்று மிகப் பெரிய அளவில் திரண்டுள்ளது. இவருடைய தனித்துவம், எந்த அரசியல்வாதியையும் அருகில் அமர வைப்பது இல்லை.


குருநாதன், பெங்களூரு: மனிதர்களுக்கு எதிராகத் தான் அறப் போராட்டம் நடத்த வேண்டும். ஊழல் பேய்களுக்கு எதிரான இப்போராட்டம் உறைக்காது. எனினும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


கவி, கோவை: பல கோடி மக்களின் பிரதிநிதியாக போராடும் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனின் ஆதரவும் கண்டிப்பாக உண்டு. வந்தே மாதரம்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Silambarasan Rajendran - Chennai,இந்தியா
09-ஏப்-201110:18:55 IST Report Abuse
Silambarasan Rajendran விடியலுக்கான தீபொறி . ஹசாரே அய்யா உங்களுக்காக ௧௦௦௦ இளைஞர்கள் உண்டு கடைசி வரை தொடருங்கள் . ஜெய்ஹிந்த் .
Rate this:
Cancel
Shivram - Jubail,சவுதி அரேபியா
09-ஏப்-201100:34:01 IST Report Abuse
Shivram My full support to Great soul & living Mahatma Anna Hazare. His protest is an eye opener to all Indians. Jai Ho
Rate this:
Cancel
Muthu Pandi - madurai,இந்தியா
08-ஏப்-201120:16:16 IST Report Abuse
Muthu Pandi இன்று நம் தேசத்தின் ஊழலை எதிர்த்து ஒரு தன்னலமில்லா தலைவன் போராடுகிறான். இத்தகைய புரட்சியாளனுக்கு எமது முழு ஆதரவு எப்போதும் உண்டு. என் தேசத்து மக்களே தயவு செய்து இபொழுதாவது ஒன்று குஉடுங்கள், என்றும் இந்தியன் சி.முத்துபாண்டி , அண்டர்கொட்டாராம், மதுரை-625020
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X