சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் சூதாட்டக்கும்பல்: ரூ. 45 லட்சம் பொருள் பறிமுதல்

Added : பிப் 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஊட்டியில் சூதாட்டக்கும்பல்: ரூ. 45 லட்சம் பொருள் பறிமுதல்

ஊட்டி:ஊட்டி தனியார் ஓட்டலில் பணம் மதிப்பீடு கொண்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட, வெளிமாநிலத்தை சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூதாட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தனியார் ஓட்டலில் பணம் மதிப்பீடு கொண்ட 'டோக்கன்' வைத்து விளையாடும் சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நீலகிரி எஸ்.பி., சண்முகபிரியா உத்தரவின் பேரில், நீலகிரி போலீசார் கோவை விமான நிலையத்திற்கு சென்று சூதாட்ட கும்பபை பிடிக்க காத்திருந்தனர்.விமானத்தில் இறங்கிய சிலர் ஊட்டி நோக்கி வாகனத்தில் செல்வதை போலீசார் கண்காணித்தனர். அந்த கும்பல், ஊட்டி நகரிலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, தனியார் விடுதியை, போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கும்பல் விடுதியில் பணம் மதிப்பீடு கொண்ட டோக்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.ரூ. 4௫ லட்சம் பொருட்கள் பறிமுதல்போலீஸ் விசாரணையில், 'பெங்களூரு, ஐதராபாத்சேர்ந்த சிலர், பணம் மதிப்பீடு கொண்ட டோக்கனில் சூதாட்டம் நடந்துள்ளது. ஓட்டலில் உள்ள 50 அறைகளையும் இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். ஓட்டலிருந்த 40 ஆண்கள், 8 பெண்களிடம் ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர்.இவர்களிடமிருந்த, 1.17 லட்சம் பணம்; வெளிநாட்டு மது பாட்டில்கள்; கம்ப்யூட்டர், எட்டு மொபைல் போன்; ஸ்வைப்பிங் மெஷின், 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் டோக்கன்கள்(5698 காயின்கள்), இரண்டு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில், மாதாரப்பு விஜய், 39, ( தெலுங்கானா), சதீஷ்குமார், 37, ( பெங்களூரு), ஓம்கார், 33, ( கர்நாடகா), ரோஹித்பாபு(பெங்களூரு), பரமேஷ்,40,(தெலுங்கானா), கராட்டி வெங்கடேஷ் திலக்ராம், 35,(ஆந்திரபிரதேஷ்) ஊட்டி சொகுசு விடுதி மேலாளர்கள் கேரளாவை சேர்ந்த சோனி மோகன், 31, ஊட்டி மிஷினரி ஹில் பகுதியை சேர்ந்த அரிஜித் குட்டா, 43, ஆகிய, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி., சண்முகபிரியா நிருபர்களிடம் கூறுகையில், '' ஊட்டி சர்வதேச சுற்றுலா ஸ்தலம் என்பதால், சொகுசு விடுதிகள், விதிமீறி நடக்கும் சீட்டு 'கிளப்'களில் திடீர் சோதனை தொடரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-பிப்-201912:20:37 IST Report Abuse
Devanatha Jagannathan இதெல்லாம் லிசென்ஸ் கொடுத்து ஒழுங்குபடுத்தணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X