தெலுங்கானாவில் தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு

Added : பிப் 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில் 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் 24 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

தெலுங்கானாவில். காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில் 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும் சிறப்பு திட்டம் 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நான்கு கட்டங்களாக இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தெலுங்கானா போலீஸ் கூறியுள்ளதாவது:

மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு நடவடிக்கையின் ஐந்தாவது கட்ட பணிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் 466 சிறுமியர் உள்பட 2119 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 1303 பேர் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்; மீதமுள்ள 816 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டனர். பிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக வேலை பார்த்த குழந்தைகளும் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசாருடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநில போலீசின் 'மொபைல் ஆப்' மூலமாகவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இந்தக்
குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.இதுவரை நடந்துள்ள நான்கு கட்ட நடவடிக்கைகளின்போது 22 ஆயிரம் குழந்தைகளும் ஐந்தாவது கட்டத்தில் 2000 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-பிப்-201912:16:36 IST Report Abuse
Devanatha Jagannathan பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X