பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் வளர்ச்சிபணிகளை துவக்கி வைத்தார் பிரதமர்

Updated : பிப் 03, 2019 | Added : பிப் 03, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
ஸ்ரீநகர்: நாட்டை காக்கவும், அமைதிக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.விமான நிலையம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலம் வந்தார். லே நகர் வந்த அவர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர், லே நகரில் அமைக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல்

ஸ்ரீநகர்: நாட்டை காக்கவும், அமைதிக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.



latest tamil news





விமான நிலையம்

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலம் வந்தார். லே நகர் வந்த அவர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர், லே நகரில் அமைக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


latest tamil news



இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்; நான், இங்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட மட்டும் வரவில்லை. நாங்கள் ஆரம்பித்த திட்டங்களை துவக்கி வைக்கவும் வந்துள்ளேன். உங்களின் ஆதரவை நான் தற்போதும் எதிர்பார்க்கிறேன். பிலாஸ்பூர் - மணாலி- லே இடையிலான ரயில்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு, டில்லியிலிருந்து லே வருவதற்கான தூரம் குறையும். இதனால், சுற்றுலா துறை பெரிதும் பயன்பெறும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை 15 நாட்களுக்கு அனுமதிக்கும் வகையில், நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதனால், லே வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


latest tamil news


Advertisement




எய்ம்ஸ் மருத்துவமனை

தொடர்ந்து பிரதமர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா, சம்பா மாவட்டத்தின் விஜய்பூர் நகரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.


latest tamil news



பின்னர் அவர் பேசுகையில்; தேர்தலில் வெற்றி பெறவே விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை காங்கிரஸ் அறிவிக்கிறது. 2008- 09 காலகட்டத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கூறியது. ஆனால், 52 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்தது. இது குறித்த சிஏஜி அறிக்கையில், தகுதி இல்லாத 30 லட்சம் பேரின் கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


latest tamil news




பல்கலை திறப்பு

பின்னர் லடாக் நகரில் அமைக்கப்பட்டுள்ள லடாக் பல்கலைகழகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது, லடாக் பிராந்தியத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலை ஆகும். ஜம்மு பிராந்தியத்தில் நான்கு பல்கலை, ஐஐடிக்களும், காஷ்மீர் பிராந்தியத்தில், 3 பல்கலைகள், ஒரு தேசிய தொழில்நுட்ப கழகமும் உள்ளன.


மாணவர்களுடன் கலந்துரையாடல்

இதன்பின்னர் ஸ்ரீநகரில், மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


latest tamil news




அப்போது, அவர் கூறுகையில், நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த, நசீர்வானி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நசீர் அகம்மதுவானிக்கு மத்திய அரசு அசோக் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. அவரை போன்றவர்கள் தான், காஷ்மீர் இளைஞர்களுக்கும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும், நாட்டிற்காக வாழ வேண்டும் என்பதை எடுத்து காட்டினார். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் உலக புகழ் பெற்ற தால் ஏரிக்கு சென்ற பிரதமர், படகு இல்லங்களை பார்வையிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-பிப்-201916:57:10 IST Report Abuse
ganapati sb காஸ்மீரில் பயங்கரவாதிகளை களை எடுத்து கல்லெறிதல் குறைத்து அமைதியான வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வைத்த மோடிக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
04-பிப்-201913:07:01 IST Report Abuse
yila நாலரை வருடமா உக்காந்து உக்காந்து நிறைய அடிக்கல்ல தான் செஞ்சி வச்சிருப்பாங்க போல வேற ஒண்ணையுமே காணோம்?
Rate this:
Cancel
tamil - coonoor,இந்தியா
04-பிப்-201908:38:22 IST Report Abuse
tamil ஆட்சியே முடியப்போகுது, இப்போது தான் காஷ்மீர் ஞாபகம் வந்திருக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரே காஷ்மீர் புராணம் தான், மக்களுக்கு மறதி அதிகம் அந்த தைரியம் தான் அரசுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X