வேலைவாய்ப்பு என்னாச்சு ? ராகுல்

Updated : பிப் 03, 2019 | Added : பிப் 03, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement
பாட்னா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இதுவரை யாருக்காவது வேலை கிடைத்ததா? இல்லை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில்

பாட்னா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார்.



latest tamil news



பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இதுவரை யாருக்காவது வேலை கிடைத்ததா? இல்லை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தேன். ஆனால், 10 நாட்களுக்குள் கடன் தள்ளுபடி செய்தோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்.


latest tamil news



மோடி கூறிய நல்ல காலம் எங்கே? ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பெரிய மோசடி. பொது மக்களின் பணத்தை மல்லையாவிற்கும், நிரவ் மோடிக்கும் தான் கொடுத்தார். பா.ஜ.,வை போல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை அறிவிக்கவில்லை. யாரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படவில்லை. ரபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் கோவா முதல்வர் பரீக்கருக்கு தெரியாமல் போனது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
07-பிப்-201910:33:56 IST Report Abuse
Ramamoorthy P உங்கள் ஆட்சி காலத்தில் மருமகனை புரோக்கராக வைத்துக்கொண்டு நீங்கள் அடித்த கொள்ளை போதாதா/ மோடி வேறு உங்கள் கணக்கில் பத்தினைந்து லட்சம் போடுவார் என்று பகல் கனவு கொண்டிருக்கிறீர்களா?
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
04-பிப்-201910:35:39 IST Report Abuse
Ramalingam Shanmugam சொந்த தொழில் செய்ய தைரியம் இல்லை எவனிடமாவது கைகட்டி வேலை பார்க்கவேண்டும் வட நாட்டவரை பாருங்கள் சொந்த தொழில் செய்பவரே அதிகம் எல்லோரும் ஒரே படிப்பு படிப்பது வேலை கேட்பது எல்லோரும் ஒரே பொருளை விளைவிப்பது விலை கிடைக்க வில்லை என்பது சீனாவை பாருங்கள் native option பார்ப்பது இல்லை creative thinking இல்லை கொடி பிடிப்பதுதான் பிரதான வேலை
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04-பிப்-201910:33:15 IST Report Abuse
ShivRam ShivShyam ஆமா பப்பு .. ரெண்டு மூணு பேரு போட்டி போட்ட ஒரு பிரதமர் பதவிக்கு இப்போ 22 பேரு போட்டி போடறீங்க .. வேலை இல்லா திண்டாட்டம் மோடியினால் அதிகமாகி விட்டது உங்களுக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X