அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான காங்.,- நிர்மலா தாக்கு

Updated : பிப் 03, 2019 | Added : பிப் 03, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement
கோவை: காளைகளை விளையாட்டு விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் சேர்த்ததால் தான் ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்பட்டது என்றும் ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த கடும் முயற்சிகள் செய்து அவசர சட்டம் இயற்றியது மோடி அரசு என்றும் கோவையில் நிருபர்களிடம் பேசிய மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகள் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

கோவை: காளைகளை விளையாட்டு விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் சேர்த்ததால் தான் ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்பட்டது என்றும் ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த கடும் முயற்சிகள் செய்து அவசர சட்டம் இயற்றியது மோடி அரசு என்றும் கோவையில் நிருபர்களிடம் பேசிய மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகள் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே, உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து ராகுலிடம் விளக்கம் கேட்க வேண்டும்.latest tamil news
மேற்கு வங்க முதல்வருக்கு, பா.ஜ.,வின் வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கு பா.ஜ., தொண்டர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் ஜனநாயகம் செத்துவிட்டது என்கின்றனர்.

பா.ஜ,.விற்கு எதிராக தமிழகத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி குறித்து தகவலை தமிழக தலைமை அறிவிக்கும்.தேர்தலுக்காக ரபேல் குறித்து பொய் தகவல் பரப்புகின்றனர்.இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை மக்கள் ஏற்று கொண்டனர். மாநில அரசுக்கு ஜிஎஸ்டியால் நஷ்டம் ஏற்படாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுக்கு நஷ்டம் என்பார்கள். ஆனால், நஷ்டத்தை சரி கட்டுவது மத்திய அரசு தான்.


latest tamil news

கேள்வி கேளுங்கள்


ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். அப்போது கூட்டணியில் பங்குதாரராக இருந்தது திமுக. இதன் காரணமாகத்தான் ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்பட்டது. ஆனால் அந்நேரத்தில், மோடியை குறை கூறினர். ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு என பா.ஜ., கருதி அதனை நடத்த ஆவன செய்தோம்.
பா.ஜ.,விடம் மீடியாக்கள் கேள்வி கேட்பதை போல், திமுகவிடமும், காங்கிரசிடமும் கேள்வி கேட்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நியாயமான கேள்விகளை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இதனை நான் வரவேற்கிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
04-பிப்-201912:42:40 IST Report Abuse
yila இதைச் சொல்ல இவருக்கு நாவு ஏன் கூசவில்லையோ?
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
04-பிப்-201910:16:35 IST Report Abuse
muthu ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். அப்போது கூட்டணியில் பங்குதாரராக இருந்தது திமுக. இதன் காரணமாகத்தான் ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்பட்டது. DUE TO BETA FILING CASE AGAINST JALLIKATTU , BAN WAS IMPOSED BY COURT . DUE TO WILD ELEPHANT USE AT TEMPLES, BETA HAS AGREED FOR JALLIKATTU AFTER PEOPLE AGITATION . IN ORDER TO GET VOTES BY CONGRESS , DON'T REMOVE NEET IN TAMILNADU ,DON'T REMOVE WEALTH FACTOR (MORE THAN 30 LACS ) IN OBC RESERVATION ETC WHEN IN POWER.
Rate this:
Cancel
Vittal Anand - Chennai,இந்தியா
04-பிப்-201909:55:00 IST Report Abuse
Vittal Anand மோடிக்கு சரியான தளபதி . உப்புந்தியா என்று கேட்டால் பருப்புந்தி என்று பதிலளிக்கவும் தடுக்கிவிழுந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்கிறார்.இங்கே தமிழர்கள் அறிவுமிக்கவர்கள். இந்த மாதிரி பிரச்சாரம் இங்கே எடுபடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X