தர்ணாவை துவக்கினார் மம்தா

Updated : பிப் 03, 2019 | Added : பிப் 03, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
கோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை துவக்கினார். தர்ணாவில் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார்.சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்து பின் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ.,யின் மூலம், மோடி அரசின் அரசியல்
தர்ணா,Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை துவக்கினார். தர்ணாவில் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார்.


latest tamil news


சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்து பின் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ.,யின் மூலம், மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில் கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையம் முன்பு மம்தா தனது தர்ணாவை துவக்கினார். இதில் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார்.


ஆதரவு:

தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தாவுடன் காங்., தலைவர் ராகுல், தேசியவாத காங் தலைவர் சரத்பவார் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடினர். இந்நிலையில் மம்தாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் ஜனநாயக தலைவர் மெகபூபா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


சுப்ரீம் கோர்ட்டை நாடுது சிபிஐ:

கோல்கட்டா சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டை இன்று இரவு நாட சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
போராட்டம்:


சிபிஐ நடவடிக்கையை கண்டித்து திரிணாமுல் காங்., கட்சியினர் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan S - Trichy,இந்தியா
04-பிப்-201906:41:13 IST Report Abuse
Balakrishnan S நாளை இவர்கள் கூட்டணி ஜெயித்து (அத்தைக்கு மீசை முளைச்சா) இந்த லேடி பிரதமர் ஆனா CBI ஐ கலைச்சிடுவாங்களாமா...? ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்...
Rate this:
Cancel
S.Anantha subramanian - Flat no.C2, old no 4/2, new no13, zackria colony main road, sakthi apts, choolaimedu, chennai 600094,இந்தியா
04-பிப்-201906:36:07 IST Report Abuse
S.Anantha subramanian Shame on the part of the chief minister blocking cbi personel and arresting them, when they are on duty.
Rate this:
Cancel
Suresh Palanisamy - Coimbatore ,இந்தியா
04-பிப்-201904:48:21 IST Report Abuse
Suresh Palanisamy கலவரங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயலுகின்றன. பெங்கால் ஆத்தா, இப்போ கண்ணிவெடில கால் வெச்ச நிலைதா உனக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X