பதிவு செய்த நாள் :
திருப்பதி கோவில்
கிரீடங்கள் மாயம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் உற்சவமூர்த்திகளின் மூன்று கிரீடங்கள் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி கோவில்,கிரீடங்கள்,மாயம்



ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரசித்தி பெற்ற திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.


இந்நிலையில், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கோவிந்தராஜ சுவாமி கோவிலில்,

உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கும் மூன்று கிரீடங்கள் காணமால் போனது, நேற்று முன்தினம் தெரிய வந்தது.


தகவல் அறிந்த, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்கு வந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பொறுப்பு அதிகாரிகளிடமும், விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று பகலிலும், இந்த விசாரணை தொடர்ந்தது.மேலும், காணாமல் போன பொருட்களை கண்டறியும், போலீஸ் சிறப்பு படையும், கோவிலில் ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வு முடிந்த பின், இதுபற்றிய முழுமையான விபரங்கள் தெரிய வரும்.


இதேபோல், தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன், அர்ச்சகர் ஒருவர், உற்சவமூர்த்தியின் கிரீடத்தை திருடி, அடகு வைத்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.


Advertisement

இதுகுறித்து, திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறியதாவது: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள மூன்று கிரீடங்கள் காணாமல் போனது குறித்து, கோவிலின் பெண் பாதுகாப்பு ஊழியர் தகவல் அளித்தார். அதனடிப்படையில், கோவிலில் நடத்திய சோதனையில், கிரீடங்கள் மாயமானது தெரிய வந்தது.


மாயமான, மூன்று தங்க கிரீடங்களின் எடை, 1,300 கிராம். இவை, பத்மாவதி தாயார், ஸ்ரீதேவி மற்றும் வெங்கடாசலபதிக்கு அணிவிக்கும் கிரீடங்கள் என, விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
04-பிப்-201918:21:10 IST Report Abuse

J.Isaacமேக் இன் இந்தியா , டிஜிட்டல் இந்தியா, புது இந்தியா . அமெரிக்காவில் போலி விசாவில் மாணவர்கள் 129 கைது

Rate this:
Manian - Chennai,இந்தியா
05-பிப்-201907:17:11 IST Report Abuse

Manianவியாபாரிகள், அரசாங்க அதிகாரிகளின் லஞ்சத்தை மேக் இந்தியா என்பது அறிவீனம். சைனாவிலிருந்தும் இப்படி போலி மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க வருகிறர்கள். கள்ளத்தோணி கந்த சாமிகளுடன், கள்ளத்தோணி மாணவர்களையும் சேர்க்கலாம். அமேரிக்காவில் லஞ்சம் பொதுவாக கொடுக்க முடியாததால், இவர்கள் அகப்பட்டு கொண்டார்கள். எல்லாம் திருடர்கள் மயம் ஜாதி. ஆனால் இப்படியும் செய்து பார்க்கலாமே என்ற அவர்கள் திறமையையும் வியக்காமல் இருக்க முடியாது. இவர்கள் மோடியின் பிள்ளை இல்லை. நீயும் அங்கே போக முடியவில்லியேயே என்ற கோபத்தை மோடி மேல் சுமத்தாதே . ...

Rate this:
04-பிப்-201913:19:20 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இந்து கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ஏன் கோவிலுக்குள் சேர்க்க வேண்டும். நான் தமிழகத்தை சேர்த்தும் கேட்கிறேன்.

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
04-பிப்-201911:45:36 IST Report Abuse

vbs manianஉண்மையான பக்தி உள்ளவர்கள் தற்சமயம் கோவிலுக்கு போக சங்கட படுவார்கள். பெரும்பாலான கோவிலிகளில் ஆன்றோர்கள் பிரதிஷ்டை செய்த சிலைகள் இல்லை. கோவில்கள் கொள்ளையர் கூடாரம் ஆகிவிட்டது. பணிபுரியும் நபர்களே ஒழுக்க சீர்கேட்டுக்கு அடையாளம் ஆகிவிட்டார்கள். தர்மம் நியாயம் ஜெயிக்கும் என்று சொல்லாமல் சொல்லும் கோவில்களை சூறையாடும் இவர்களுக்கு விமோச்சனம் இல்லை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
05-பிப்-201907:19:28 IST Report Abuse

Manianஇதைத்தான் கருணா விரும்பினார். கோவிலுக்கு போகாவிட்டால், சிலைகள் திருடு போனது தெரியாதே. ஆனால், தொளபதி அப்படி கொள்ளை அடிப்பதை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. இப்படியா கடல்கரையிலே தூங்கணும்? ...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X