சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை!

Added : பிப் 03, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: ஒரு வேளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் சூழ்நிலை உருவானால், அதற்கு, தமிழக அரசு தான் காரணம். ஹைட்ரோ கார்பன் திட்டம் மேம்படுத்தப்படும் என, கூறுவது தஞ்சையை பாலைவனமாக்கும் முயற்சி. 'கஜா' புயல் பாதிப்பால், 89 பேர் உயிரிழந்தனர்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தேவை. அதை, மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக மக்களை, மத்திய அரசு வஞ்சிக்கிறது.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி: விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம், மாநிலங்களில் ஏற்கனவே உள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், அதற்கு மேல் சேர்த்து கொடுக்கலாம். நலத்திட்டங்களை நிறைவேற்றுவதே அரசின் கடமை. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுமா என, என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்; இது குறித்து, பதில் கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பேச்சு: தேர்தல் தொடர்பாக, இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டும்; அது, நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். தேர்தலில், மக்கள் நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும். எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டை யாருக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்வதற்கு, சரி பார்க்கும் சிறு கருவியை பொருத்த வேண்டும். இதை, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் ஏற்படுத்த வேண்டும்; இதற்கு, நிதி பெரிய விஷயமல்ல.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகிக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, தி.மு.க.,வுடன் இணைந்து, பல்வேறு அறப்போராட்டங்களில் ஈ டுபட்டு வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில், தி.மு.க., உடனான உறவு குறித்து, விஷமத்தனமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. அதை, வன்மையாக கண்டிக்கிறேன்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி: அ.தி.மு.க., கூட்டணி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் நேரத்தில் முடிவு செய்வர். தமிழகத்துக்கு உதவி செய்பவர்களுடன் கூட்டணி என, முதல்வர் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தொடர்பாக பிரசாரகுழு அமைக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்புகள் ஏற்புடையதல்ல; மக்களின் கணிப்பு தான் முக்கியம். மக்கள் என்ன முடிவு எடுப்பர் என்பது, மக்களோடு பழகும், எங்களுக்கு தான் தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X