பதிவு செய்த நாள் :
திட்டம்!
விவசாயிகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க...
மாநில அரசுகள் ஒத்துழைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

நியூயார்க் : ''விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை, எதிர்காலத்தில் உயர்த்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகளுக்கு உதவும் வகையில், மாநில அரசுகளும், இந்த திட்டத்தில் இணைய வேண்டும்,'' என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறினார்.

விவசாயி,உதவித் தொகை,அதிகரிக்க திட்டம்!


லோக்சபாவுக்கு, வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின், 2019 - 20நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த, அருண் ஜெட்லி, மருத்துவ சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றுள்ளதால், இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, பியுஷ் கோயல், இதை தாக்கல் செய்தார்.

ரூ.6,000:


'நாடு முழுவதும் உள்ள, 12 கோடி சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை, விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்' என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக உள்ள, அருண் ஜெட்லி கூறியதாவது: சிறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், அதாவது, மாதத்துக்கு, 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் வகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த திட்டத்துக்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இந்த பண உதவி திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்போது, விவசாயிகளுக்கான உதவித் தொகை மேலும் உயர்த்தப்படும். விவசாயிகளின் பிரச்னை என்பது, பல முகங்கள் உடையது. கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; அதே நேரத்தில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதனடிப்படையில் தான், கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களில், மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பெரும்பாலான காலங்களில், காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. ஆனால், காங்கிரஸ் காலத்தில் செய்த மிகப் பெரிய சாதனையாக, அவர்கள் கூறுவது என்ன... விவசாயிகளின், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினர். உண்மையில், 52 ஆயிரம் கோடி ரூபாய் தான் கொடுத்தனர்.

தணிக்கை அறிக்கை:


அதிலும் மோசடி நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய அரசின் கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை கூறுகிறது. ஆனால், பா.ஜ., அரசு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக, பல லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான், விவசாயிகளுக்கு பண உதவி வழங்கும் திட்டம். இதில், மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும்; அவர்களும், தனியாக பண உதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும். எதிர்மறை அரசியலை மட்டும் செய்து வரும் காங்கிரஸ், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தைப் போல, இதில் அரசியல் கலக்காமல், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், மத்திய மற்றும் மாநில திட்டமாக இதை செயல்படுத்த வேண்டும். இந்த பண உதவி திட்டம், ஒரு கவர்ச்சி திட்டம் அல்ல. உர மானியம் என, விவசாயிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களில், இதுவும் ஒன்று. ஆனால், இது போன்று எந்த திட்டத்தையும் செயல்படுத்தாததால், காங்கிரசால், இதை புரிந்து கொள்ள முடியவில்லை.

Advertisement

பட்ஜெட் குறித்து, காங்., தலைவர் ராகுல் விமர்சித்துள்ளதை ஏற்க முடியாது. அவர் இன்னும் வளர வேண்டும்.நாம், கல்லுாரி சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை; தேசிய பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

எப்போது திரும்புகிறார்?

தன் உடல்நிலை குறித்து, அருண் ஜெட்லி கூறியதாவது: தற்போது, அறுவை சிகிச்சை முடிந்துள்ளது; தொடர் சிகிச்சைகள் நடந்து வருகின்றன. அதனால், பட்ஜெட் மீது பார்லிமென்டில் நடக்கும் விவாதத்தின் போது, நான் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை. டாக்டர்கள் ஆலோசனை அளித்த பின், எப்போது நாடு திரும்புவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை!

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது: வேலைவாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சியை கணக்கு காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை தீவிரமாக உள்ளதாக, ஒரு மாயையை உருவாக்கி உள்ளனர். ஆனால், அது உண்மையில்லை. நாட்டில், வேலைவாய்ப்பில்லை என்ற பிரச்னையே இல்லை. எந்த ஒரு அரசின் பதவிக்காலம் முடியும் போதும், அதன் மீது சில அதிருப்திகள் இருக்கும். ஆனால், பா.ஜ., அரசின் மீது, அது போன்ற எதுவும் இல்லாததால், வேலைவாய்ப்பு பிரச்னை என்ற பொய் ஆயுதத்தை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-பிப்-201916:16:49 IST Report Abuse

ganapati sbமோடியோடு இணைந்து, உடல் உபாதைகள் இருந்த போதும் அயராது உழைத்து அருண்ஜெட்லீ planing commission கலைத்து nitiayog கொண்டுவந்தது முதல் jandhan demon gst bank merger insolvancy 50 கோடி பேருக்கு மருத்துவக்காப்பீடு பட்ஜெட் feb1 இல் தாக்கல் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு இணைத்தல் IT 5lack excemption விவசயிக்கு 6000 வரை தொடர்ந்து செய்த நிதித்துறை சீர்திருத்தம் மகத்தானது.

Rate this:
Ashwin - chennai,இந்தியா
04-பிப்-201910:02:16 IST Report Abuse

Ashwinநான்கறைவருடம் இல்லாத கரிசனம் , விவசாயிகள் பட்ட படுகின்ற பாடுகளை மறக்கமாட்டார்கள் . கார்போரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் அரசு கார்போரேட்டுகள் மட்டுமே கண்ணுக்கு தெரியும் அரசு .

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-பிப்-201908:39:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaபடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் உதவி தொகை தரலாம் இல்லையா

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X