பதிவு செய்த நாள் :
மீண்டும் ஆலோசிக்க
எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மீண்டும் கூட்டம் நடத்தி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும்,ஆலோசிக்க,எதிர்க்கட்சி தலைவர்கள்,முடிவு


லோக்சபா தேர்தல், ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவுள்ளது. தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில், ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

காங்., தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக ஏற்க, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் மறுத்து வருகின்றனர். மாயாவதியும், அகிலேஷும், உ.பி.,யில், காங்.,கை ஒதுக்கி, தனி கூட்டணி அமைத்து உள்ளனர். பிரதமர் கனவில் உள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், சமீபத்தில், 22 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தை நடத்திக் காட்டினார்.

கவரும் அறிவிப்புகள்:


சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், ஏழைகள், வேலையற்ற

இளைஞர்கள் உள்ளிட்டோரை கவரும் அறிவிப்புகள் இடம்பெற்றன.லோக்சபா தேர்தலை குறிவைத்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள், எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க, எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இந்த கூட்டத்தில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் துயர நிலை, ஜனநாயக அமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

'குறைந்தபட்சம், 50 சதவீத மின்னணு ஓட்டு இயந்திரங்களில், பதிவான ஓட்டிற்கு உறுதி ஒப்புகை சீட்டு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஆலோசிக்க உள்ளன. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்துக்கு, சமூக ஆர்வலர்கள், பல்துறை நிபுணர்களை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒருங்கிணைந்த அணிவரும், 13ல் பார்லி.,யில், பட்ஜெட் கூட்டத் தொடர் முடிகிறது. அதன் பின், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து பேசுவதால், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் களையப்படுவதற்கான வாய்ப்புகள்

Advertisement

உருவாகும். இதன் மூலம், பொதுத் தேர்தலில், ஒருங்கிணைந்த அணி உருவாகும். கடந்த முறை எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி விவாதித்தபோது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள், மின்னணு ஓட்டு இயந்திரம் கூடாது என, கருத்து தெரிவித்தனர்.

மாறாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 50 சதவீத மின்னணு ஓட்டு இயந்திரங்களில், ஒப்புகை சீட்டு வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவை கூறின.

ராகுல் பிரதமராக தேஜஸ்வி ஆதரவு பீஹார் மாநிலம், பாட்னாவில் நேற்று, காங்., ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளின் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று, தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும், காங்., தலைவர் ராகுலிடம் உள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, அவர் வழிநடத்தி செல்ல வேண்டும்.

சட்டசபைத் தேர்தலிலும், இந்த கூட்டணி தொடர வேண்டும்.காங்., தலைமையிலான கூட்டணி, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், ராகுல் பிரதமராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
04-பிப்-201919:07:04 IST Report Abuse

blocked userஅத்தனை களவாணிப்பயல்களையும் ஒரே வரிசையில் நிறுத்தி நங்கள்தான் களவாணி என்று கையை உயர்த்தி சொல்ல வைத்த எங்கள் தல மோடிக்கு ஒரு ஜே....

Rate this:
rajan. - kerala,இந்தியா
04-பிப்-201915:21:50 IST Report Abuse

rajan.  ஏம்பா கனவான்களே முதலில் உங்க ஆளுங்க ஊழல்களை பற்றி பேசி தெளிவா புரிஞ்சுக்கோங்க. ஆட்சி பீடத்துக்கு உங்களுக்கு இப்போதைக்கு என்ன தகுதிகள் இருக்குது அருகதை இருக்குதா என விலாவாரியா அலசி பாருங்க. உங்க கூட இருக்கிறது ஊழல் தலைவர்களா அவுக சொத்து பந்துகளை பார்த்துக்க அச்சாரம் எப்படி இருக்கு என எல்லா சிந்தியுங்க. அப்புறம் கூட்டம் போடுங்க கும்மி அடிச்சுக்கோங்க. அயோக்கியனுங்க கூட்டம் இது.

Rate this:
sripa - muscat,ஓமன்
04-பிப்-201912:59:45 IST Report Abuse

sripaதிருடர்களின் கூடாரம் எதிர் கட்சி. மோடி அவர்களை காலி செய்யாமல் விடமாட்டார்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X