பதிவு செய்த நாள் :
பதற்றம்!
கோல்கட்டாவில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது;
மம்தா போராட்டத்தால் மேற்குவங்கத்தில்..

கோல்கட்டா : 'சிட்பண்ட்' மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணா போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

கோல்கட்டா,சி.பி.ஐ., அதிகாரிகள்,கைது,மம்தா,போராட்டத்தால்,மேற்குவங்கத்தில் பதற்றம்


ரோஸ்வேலி மற்றும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்குகளில் இந்த மாநிலத்தைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது; அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே, ராஜிவ் குமார் தலைமறைவாகி விட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் சி.பி.ஐ., கூறிஉள்ளது.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து,

ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., என ஒவ்வொரு துறையாக அழித்து வருகிறது. அந்த வரிசையில், மாநில போலீஸ் துறை மீதும் தன் அதிகாரத்தை செலுத்தப்பார்க்கிறது.
உலகின் தலை சிறந்த போலீஸ் அதிகாரிகளில் ராஜிவ் குமார் ஒருவர். அவரது பணியின் மீதான மரியாதை, நேர்மை, வீரத்தை யாரும் சந்தேகப்பட முடியாது. அவர் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளார். அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டதாக பொய்யான ஒரு தகவலை சி.பி.ஐ., மூலம், பா.ஜ., பரப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் வீட்டுக்கு 'சிட்பண்ட்' வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் குழு நேற்று சென்றது. ஆனால் அங்கிருந்த போலீசார், சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது, 'விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் உள்ளதா' என கேட்டு சி.பி.ஐ., அதிகாரிகளிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சி.பி.ஐ., அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கோல்கட்டாவில் உள்ள சி.பி.ஐ., மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநில போலீசார் திடீரென வாபஸ் பெறப்பட்டனர். இதையடுத்து அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே, மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: சட்டம், ஒழுங்கு பிரச்னை மாநில அரசு சம்பந்தப்பட்டது. இதில் மத்திய அரசு தலையிட கூடாது. மத்திய அரசின் நடவடிக்கைகள், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறேன். பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் சேர்ந்து மேற்கு வங்க அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சிட்பண்ட் மோசடி வழக்கில், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிராக, போதுமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு:

மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்புர் மாவட்டத்தின் பலார்கட் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த, உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கலெக்டர் வீட்டுக்கு முன், பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், பலார்கட் பகுதியில் திரண்டிருந்த, பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், ஆதித்யநாத் பேசிய, 'ஆடியோ' ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எதிர்க்கட்சியினர் இங்கு வந்து, பொதுக் கூட்டங்களில் பங்கேற்க, மம்தா அரசு, அனுமதி மறுக்கிறது. மம்தா நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டிக்க வேண்டும்.இவ்வாறு, ஆதித்ய நாத் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhavan Parthasarathy - Chennai,இந்தியா
05-பிப்-201917:04:43 IST Report Abuse

Madhavan Parthasarathyஅதற்கு ஏன் தலையிலே முட்டாக்கு?

Rate this:
skv - Bangalore,இந்தியா
05-பிப்-201905:17:48 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மமதாவின் செயல் கேவலமானது இதுகள் ஜஸ்ட் அஞ்சிவருச ஆட்ச்சியாளர்கள் தான் மீண்டும் தேர்தல்ல ஜெயிச்சாலும் பெர்மெனென்ட் அரசு அமைக்கமுடியாது, ஆனால் சி பி ஐ அப்படி இல்லீங்களே மத்திய அரசு நிர்வாகம் இதுமட்டுமில்லீங்க எல்லா அரசு நிர்வாகமும் அப்படியேதான் மாறன் செய்தது கனிமொழி தப்பியது எல்லாம் எப்படி ?????? மமதாவின் மமதையேதான் இந்த சீரழிவுக்கு காரணம் , அப்படி என்ன இவை பெரிய ..........யா ?இவளுக்கு ஆதரவப்போயிருக்கா கனிமொழி இதுவும் ஒரு பிராடுதான் கொள்ளைதான் அடிப்பாங்க நாட்டையே சூறையாடுவாளுக சிஇட்டுக்கம்பெனிநடத்தியேதான் பல்கோடிலே சொத்து சேர்த்தா சசிகலா அதேபோல தான் சாரதா சீட் பாண்ட் மூலம் கொள்ளைகள் அடிச்சவங்களெல்லாம் உத்தமர்களா தமிழ் நாட்டுலே சீட்டிங் கம்பெனிகளால் சகலமும் இழந்து நடுத்தெருவில் நின்ன பலரை தெரியுமடி உங்களுக்கெல்லாம் கலியுகம் சசி எவ்ளோ பிராடுகள் செய்து ஐயாவாள் காக்கப்பட்டால் ஆனால் அந்த ஜ்யாக்கே வச்சா ஆப்பு அந்த மூதேவி இந்த மமதை சிபிஐ கிட்டயே ஆட்டம் போடுறாளே நிஸ்ச்சயம் இருக்கு பலன் பிராடுகளே என்று தெரிஞ்சும் இதுகளுக்கெல்லாம் வோட்டுப்போட்டாலே அவாள்ளாம் தான் கூமுட்டைகள் படிச்ச முட்டாள்கள்

Rate this:
Raja - chennai,இந்தியா
04-பிப்-201918:18:55 IST Report Abuse

Raja356 அரசியல் சாசனத்தை பயன்படுத்த வேண்டும்.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X