எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
என்ன?
பதவி பறிப்பால் அதிருப்தி;
திருநாவுக்கரசர் அடுத்த முடிவு..

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டில்லியிலிருந்து, சென்னை திரும்பியதும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, திருநாவுக்கரசர், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பதவி பறிப்பு,அதிருப்தி,திருநாவுக்கரசர்,அடுத்த முடிவு,என்ன?


தமிழக, காங்., தலைவராக, 2016 செப்., 13ல், திருநாவுக்கரசர் பதவி ஏற்றார். அவர், தலைவராக பொறுப்பேற்கும் முன், கட்சியில், 47 மாவட்ட தலைவர்கள் இருந்தனர். பின், கட்சியை அமைப்பு ரீதியாக பிரித்து, 72 மாவட்டங்கள் ஆக்கினார். புதிய மாவட்டங்களுக்கு, தன் ஆதரவாளர்களை தலைவராக நியமித்து அழகு பார்த்தார்.

மாநில நிர்வாகிகளை பொறுத்தவரை, ஞானதேசிகன் தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்டவர்களே, தற்போதும் உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. எனவே, இவர்களில், திருநாவுக்கரசருக்கு ஆதரவாளர்கள் குறைவே. அதேசமயம், பிற அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஆதரவாளர்களாக உள்ளனர்.

தமிழக, காங்., வரலாற்றில், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல் முடிவு தெரிந்த பிறகே, தலைவர் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், தேர்தலை சந்திக்காமலேயே, பதவியை இழந்துள்ளார் திருநாவுக்கரசர். இது, அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்தி அடையச் செய்து உள்ளது.

திருநாவுக்கரசர் - காங்., தலைவர் ராகுல் இடையே, நல்ல புரிதல் இருந்து வந்தது. ஆனால், 'என் தலைமையில் தான், லோக்சபா தேர்தல் நடக்கும்' என, மேலிட தலைவர், முகுல் வாஸ்னிக் முன்னிலையில், திருநாவுக்கரசர் கெத்தாக பேசியது தான், அவரது பதவிக்கு ஆபத்தாகி விட்டது என, ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். மாநில தலைவர் பதவி பறிபோயுள்ள நிலையில், திருநாவுக்கரசரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: மாநில தலைவராகும் முன், அகில இந்திய காங்., செயலர் பதவியை திருநாவுக்கரசர் வகித்தார். எனவே, மீண்டும் அந்த பதவி, அவருக்கு கிடைக்கலாம். இல்லையெனில், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஏதாவது ஒரு பதவியை வழங்கினால், ஆதரவாளர்கள் திருப்தி அடைவர். டில்லியில் உள்ள திருநாவுக்கரசர், சென்னை வரும் போது, உற்சாக வரவேற்பு அளிப்போம்.

ராகுல் முடிவுக்கு, நாங்கள் கட்டுப்படுவோம். எங்களை நியமித்தது ராகுல் என்றால்,

Advertisement

பரிந்துரை செய்தது திருநாவுக்கரசர். தற்போது உள்ள, 72 மாவட்ட தலைவர்களில், 25 பேர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர்கள். அனைவரும், உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். டில்லி தலைமைக்கு எதிராக, நாங்கள் செயல்பட மாட்டோம். புதிய தலைவர், கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு அளிப்போம். அதேசமயம், நாங்கள் புறக்கணிக்கப்பட்டால், சும்மா விடமாட்டோம். எங்களின் எதிர்காலத்தை விட, திருநாவுக்கரசரின் எதிர்காலம் முக்கியம். அவரது ஆலோசனையை பெற்று, முன்பை விட வேகமாக செயல்படுவோம்; பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திருநாவுக்கரசரும், அகில இந்திய செயலர் அல்லது மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்பார்த்து, டில்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அவரை தங்கள் கட்சிக்கு இழுக்க, சில மாநில கட்சிகளும், அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. திருநாவுக்கரசர், சென்னை திரும்பியதும், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என, அவருக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
06-பிப்-201908:18:43 IST Report Abuse

Indhiyanப்பூ, இதென்ன பெரிய விஷயமா? அடுத்த கிளைக்கு தாவ வேண்டியதுதானே, இதுவரை எவ்வளவு தாவியிருக்கோம்

Rate this:
karutthu - nainital,இந்தியா
05-பிப்-201916:59:14 IST Report Abuse

karutthuதிருநாவுக்கரசரே(சு) ........ மறுபிறவி எடுக்க வேண்டுமென்றால் அஇஅதிமுக வில் சேர்ந்து விடு.இல்லையென்றால் அறந்தாங்கியில் அமைதியாக இருந்துவிடு.> சொல்லியது ஜீ முத்தையா அவர் எதற்கு அறந்தாங்கியில் தங்கணும் .அதான் கோடி கணக்கான மதிப்புள்ள பங்களா அண்ணா நகரில் உள்ளது .பார் அவர் விரைவில் ஜீ கே வாசன் தங்கபாலு எல்லோரும் சேர்த்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்குவார் அல்லது அவர் ஆதரவாளர்களுடன் தாய் கழகத்தில் (ஆ தி மு க ) ஐக்கிய மாகிவிடுவார்

Rate this:
sivakumar - Qin Huang Dao,சீனா
05-பிப்-201913:38:12 IST Report Abuse

sivakumar எங்கே போவேன், என்ன பண்ணுவேன் , இனி சொச்ச காலத்தை எப்படி ஓட்டுவேன், எங்கே நல்ல ஐடியா கிடைக்கும் யார் எப்போது கூப்பிடுவார்கள். டிரைவர், காரை எடு, ஒரு ரௌண்டு பொய் பார்க்கலாம் . ஒழுங்கா பிஜேபி யில் இருந்திருக்கலாம், மரியாதையுடன் ஒரு MP சீட்டுக்காவது நிற்க வைத்திருப்பார்கள். எல்லாம் போச்சே, சொக்கா, எல்லாம் போச்சே , புலம்பல் தொடர்கிறது, ஒரு வேலை வைகோ அண்ணனிடம் கேட்டு பாக்கலாமா, நல்ல ஐடியா ஏதாவது சொல்வார்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X