இரவு முழுவதும் மம்தா போராட்டம்: தொண்டர்கள் ரயில் மறியல்| Kolkata: Latest visuals from West Bengal Chief Minister Mamata Banerjee's 'Save the Constitution' dharna at Metro 5 hours since the dharna | Dinamalar

இரவு முழுவதும் மம்தா போராட்டம்: தொண்டர்கள் ரயில் மறியல்

Updated : பிப் 04, 2019 | Added : பிப் 04, 2019 | கருத்துகள் (38)
Share
கோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கிய தர்ணா போராட்டம் நேற்று (பிப்.,03) இரவு 9 மணிக்கு துவங்கி, இன்று (பிப்.,04) காலை வரை நீடித்தது.தொண்டர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.போராட்டம் நீட்டிப்புசிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற

கோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கிய தர்ணா போராட்டம் நேற்று (பிப்.,03) இரவு 9 மணிக்கு துவங்கி, இன்று (பிப்.,04) காலை வரை நீடித்தது.தொண்டர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.



latest tamil news




latest tamil news




latest tamil news


Advertisement


போராட்டம் நீட்டிப்பு



சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்து பின் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ.,யின் மூலம், மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசியல் அமைப்பை காப்போம் என்ற பெயரில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினார்.


latest tamil news




latest tamil news




latest tamil news




தொண்டர்கள் ரயில் மறியல்

மாநில முதல்வர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து முதல்வரின் கட்சி தொண்டர்கள் மிட்னாப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X