அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராம சபையில் தி.மு.க.,  கொடி!

Added : பிப் 04, 2019
Advertisement

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில் வரும், 7 முதல் 10ம் தேதி வரை நடக்கும், 21 கிராமசபை கூட்டங்களில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பங்கேற்கிறார்.அன்னுார் ஒன்றிய, நகர, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில், நேற்று நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தார்.தி.மு.க., சார்பில், கிராம சபை கூட்டங்கள், அன்னுார் ஒன்றியத்தில் வரும், 7ம் தேதி குன்னத்துாரில் துவங்குகிறது. அன்று நான்கு ஊராட்சிகளிலும், 8ம் தேதி ஏழு ஊராட்சிகளிலும், 9ம் தேதி மூன்று ஊராட்சிகளிலும், 10ம் தேதி ஏழு ஊராட்சிகளிலும் நடக்கிறது.'அனைத்து கூட்டங்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தலைமையில் நடக்கிறது. எனவே, அந்தந்த பகுதியில் மக்களிடம் தங்கள் குறைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கலாம்' எனக்கூறி மக்களை அழைத்து வர வேண்டும் என, ஊராட்சி மற்றும் கிளை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.கிராமசபை கூட்டம் நடக்கும் இடத்தில் கட்சி கொடி கட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் மோகனசுந்தரம், நகர பொறுப்பாளர் ரகமத்துல்லா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X