மத்திய அரசுக்கு எங்கள் மீது பொறாமை : மம்தா

Updated : பிப் 04, 2019 | Added : பிப் 04, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
கோல்கட்டா : விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுவதால் மத்திய அரசுக்கு எங்கள் மீது பொறாமை எனவும், திரிணாமுல் காங்., அரசின் கொள்கைகளை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது எனவும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். 2வது நாளாக போராட்டம்மேற்குவங்கத்தில் சிட்பண்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற சிபிஐ

கோல்கட்டா : விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுவதால் மத்திய அரசுக்கு எங்கள் மீது பொறாமை எனவும், திரிணாமுல் காங்., அரசின் கொள்கைகளை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது எனவும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.



latest tamil news




2வது நாளாக போராட்டம்


மேற்குவங்கத்தில் சிட்பண்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர். போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் நேற்று இரவு 9 மணி முதல் தொடர்ந்து 15 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இன்று 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் மம்தா, அப்பகுதியில் கூடி இருக்கும் தொண்டர்களிடம் உரையாற்றினார்.


latest tamil news




விவசாயிகள் தற்கொலை


அப்போது மம்தா பேசுகையில், திரிணாமுல் காங்., அரசின் கொள்கைகளை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது. விவசாயிகளின் நலன் பற்றி மத்திய அரசு பேசுவது வெறும் கண்துடைப்பு. பா.ஜ., ஆட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்., தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பா.ஜ., அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்க பார்க்கிறது. எதிர்க்கட்சிகள் குறிவைத்து தாக்கி வருகிறது. விவசாயிகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றுவதால் மத்திய அரசுக்கு எங்கள் மீது பொறாமை. மோடி தலைமையிலான ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கவலைப்படவில்லை.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ., ஈடுபடுகிறது. பாசிச சக்திகளை தோற்கடிப்போம். மத்திய அரசு வழங்குவதற்கு முன் விவசாயிகளுக்கு நாங்கள் பென்சன் வழங்குவோம். 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் மேற்குவங்கத்தில் நாங்கள் ஏற்கனவே அதை செயல்படுத்தி விட்டோம்.
எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்கிறேன். விவசாயிகளின் நலனில் மத்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
05-பிப்-201906:34:54 IST Report Abuse
sumutha - chennai //திரிணாமுல் காங்., அரசின் கொள்கைகளை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது // கொள்கைகள் என்ற வார்த்தையை மாற்றி கொள்ளைகள் என வாசிக்கவும்.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
04-பிப்-201918:55:16 IST Report Abuse
Thirumal Kumaresan இந்த விஜயத்தில் விவசாயிக்கு என்ன சம்பந்தம் என்பதை புரிந்து கொண்டாலே நல்லவர்கள் இவர் பின்னாடி நிக்க மாட்டார்கள்
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
04-பிப்-201918:23:49 IST Report Abuse
Gopi நாட்டை காப்பாற்ற நேரமில்லாத இவர்கள் கொழாயடி சண்டைக்கு வக்காலத்து வருவது எந்த பயத்தினால். அந்த போலீஸ் அதிகாரியை கடந்த இரண்டு வருடங்களாக சிபிஐ ஆஜராக வாரண்ட் பிறப்பித்தது . ஆனால் சேலைகட்டிய பெண்மணியின் பின் ஒளிந்து கொண்டு அந்த மாகானுபவர் காவல்துறைக்கே ஒளி விளக்கு என்று இந்தம்மா கூவுவது ஏற்புடையதல்ல. அநேகமாக இந்த ராஜீவ் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் வேறு லோகத்திற்கு மாமாதாவே அனுப்பி அதையும் மோடி செய்தார் என்று சொன்னாலும் வியப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X