அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி
ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை: சில நாட்களாக திரைமறைவில் நடந்த வந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே முதல் கட்டமாக கூட்டணி உடன்பாடு எட்டியுள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

A.D.M.K,ADMK,B.J.P,BJP,Bharatiya Janata Party,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ


அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் நேற்று துவங்கியது.

திரைமறைவில் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நடத்திய கூட்டணி பேச்சு வெற்றி பெற்றுள்ளது.

2ம் தேதி சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், அ.தி.மு.க., அமைச்சர் ஒருவரும் ஒரு மணி நேரம் தனியாக பேசி கூட்டணியை இறுதி செய்துள்ளனர். அதேபோல் நேற்று அமாவாசை நாள் என்பதால் பா.ம.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை, அ.தி.மு.க., தொழிலதிபர்கள் சிலர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.

முதல் கட்டமாக அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ., சார்பில் குழு அமைத்த பின் பேச்சு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை அ.தி.மு.க. மேலிடம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,விடம் இன்னும் பேச்சு துவக்கவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முடிந்ததும் அவரது மனைவி பிரேமலதாவுடன் பேச்சு நடத்த அ.தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisementபா.ஜ.,வுக்கான உள்ஒதுக்கீட்டில் கொங்கு தேசிய கட்சிக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கவும் பேசப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவராக சிதம்பரம் ஆதரவாளர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு உள்ளதால் தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., இடம்பெற வாய்ப்பு இல்லை. எனவே அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., சேரும் கட்டாயம் எழுந்துள்ளது.

திருப்பூரில் 10ம் தேதி நடக்கும் பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதில் அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
11-பிப்-201909:43:46 IST Report Abuse

மூல பத்திரம் கருத்துக்களை, செய்திகளை பார்க்கும் போது காலத்திலே இல்லாத பாஜக நோட்டாவை விட கேவலமான பாஜக, என்று இகழப்பவர்கள் கூட இதே எண்ணமாக இருப்பதை பார்த்தால் பாஜக வுக்கு இதுவே ஒரு வெற்றி என என்ன தோணுகிறது.ஏன் இப்படி அலறுகிறார்கள்

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-பிப்-201904:22:27 IST Report Abuse

J.V. Iyerஎப்படியாவது தமிழ் நாட்டிற்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

Rate this:
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201905:50:41 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>யோவ் இவ்ளோபகிரங்கமா போட்டுட்டு என்னய்யா ரகசியம் உடண்பாடுன்னுகையறு திருக்குறீங்க மக்கள் என்ன லூசு என்று முடிவே செய்துட்டீங்களா

Rate this:
மேலும் 121 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X