மிரட்டும் மன்னர்கள்...

Added : பிப் 05, 2019 | |
Advertisement
குமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில், கட்டுக்கடங்காத கூட்டத்திலிருந்து ஒரு வழியாக சித்ராவும், மித்ராவும் நகர்ந்து வந்து, ஆல மரத்தடியில் உட்கார்ந்தனர். 'ஜில்'லென வீசிய காற்றால், ''ஆஹா... அருமைக்கா,'' மித்ரா சொன்னதும், ''ஆமான்டி, சூப்பரா காத்து வருது,'' என, சித்ராவும் ஆமோதித்தாள்.துணிப்பையில் சில்வர் சம்படத்தில் இருந்த தக்காளி சாப்பாட்டை, பாக்கு
 மிரட்டும் மன்னர்கள்...

குமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில், கட்டுக்கடங்காத கூட்டத்திலிருந்து ஒரு வழியாக சித்ராவும், மித்ராவும் நகர்ந்து வந்து, ஆல மரத்தடியில் உட்கார்ந்தனர். 'ஜில்'லென வீசிய காற்றால், ''ஆஹா... அருமைக்கா,'' மித்ரா சொன்னதும், ''ஆமான்டி, சூப்பரா காத்து வருது,'' என, சித்ராவும் ஆமோதித்தாள்.துணிப்பையில் சில்வர் சம்படத்தில் இருந்த தக்காளி சாப்பாட்டை, பாக்கு மட்டையில் வைத்து சித்ராவுக்கு கொடுத்த மித்ராவும் சாப்பிட ஆரம்பித்தாள்.''அக்கா... நீங்க, கவனிச்சீங்களா? காங்கயம் எம்.எல்.ஏ., அவர் பேருக்கு ஏத்தமாதிரி 'தனி'யா நின்னுட்டிருந்ததை''''ஆமாமா... மத்த எம்.எல்.ஏ.,க்கள் ஒரு சைடிலும், இவர் தனியாகவும் நின்னாங்க. என்னதான், அ.தி.மு.க., சின்னத்தில் நின்னு ஜெயிச்சாலும்கூட, இப்போ, தினகரன் ஆதரவு நிலையில் இருக்கறதால, ஆளுங்கட்சிக்காரங்க யாரும் அவரோட நெருங்குறதில்லை''''ஏக்கா... கூவத்துாரில், எல்லோரும் ஒண்ணும் மண்ணுமாக இருந்தாங்க. அதெப்படி, இங்க நேருக்குநேர் முகத்தை பார்க்காம இருக்கறதோ...''''அடி... மித்து. நம்ம கவுண்டமணி சொன்ன மாதிரி, அரசியலில் இதெல்லாம், சாதாரணப்பா...'' என, கூறிச்சிரித்தாள் சித்ரா.''எல்லாரும், ஒற்றுமையா வேலை செய்யோணும். இல்லாட்டி, சிக்கல்தான்'னு சி.எம்., அட்வைஸ் செஞ்சாராம்,'' மித்ரா கேட்டாள்.''யாருக்காம்? எனக்கு தெரியலையே!''''திருப்பூர் ஆளுங்கட்சியில, கோஷ்டிப்பூசல் அதிகமாயிடுச்சாம். மூணு எம்.எல்.ஏ.,க்கள் ஒண்ணா சேர்ந்துகிட்டு, 'மாஜி'யை கழற்றி விட்டுட்டாங்களாம். கட்சிக்கு செலவு பண்ண யாருமே இல்லை. இதுபோக, ஒவ்வொரு தொகுதியி லும் மூணு கோஷ்டி இருக்குதாம்,''''அதனால, பூத் கமிட்டி கூட்டமே இன்னும் நடத்தல. தேர்தல் வந்தா எப்படி பண்றதுன்னு, 'மாஜி'தரப்பில், மேலிடத்துல புகார் செஞ்சாங்களாம்,''''ம்.. அப்புறம் என்ன ஆச்சுடி''''லோக்சபா தேர்தல் வருவதால, எல்லாரையும் கூப்பிட்ட, சி.எம்., 'ஏற்கனவே நிலைமை சரியில்லை; நீங்கவேற தனியா அரசியல் பண்ண வேண்டாம். ஒற்றுமையா சேர்ந்து வேலை செய்யுங்க. இல்லாட்டி சிக்கல்தான், பார்த்துக்கங்க,'ன்னு 'அட்வைஸ்' பண்ணாராம்,''''மாவட்ட செயலாளர்தான், எம்.பி., சீட் கேட்டிருக்கார்ன்னு பேசிக்கறாங்களே'' என்றாள் சித்ரா.''வேற எதுவும் இல்லைனா,எம்.பி., ஆகலாம்னு தானே நினைப்பாங்க. அதுக்காகத்தான் பேசிட்டு இருக்காங்க. அவர்எம்.பி., ஆகிட்டா, சட்டசபை தேர்தல்ல நமக்கு பிரச்னை இருக்காதுனுதான், எம்.எல்.ஏ.,க்களும் நினைக்கறாங்க. சிட்டிங் எம்.பி., யும் போராடிட்டு இருக்கறதால, கூட்டணி உறுதியான பிறகு, 'சீட்' வாங்கறதுக்கு போட்டி பலமா இருக்கும்போல'' என, மித்ரா கூறவும், ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதில், மாடு முட்டி காயமடைந்த ஒருவரை, ஏற்றி அனுப்பினர்.அதைப்பார்த்த சித்ரா, ''ரோட்டில் ஏதாவது ஏக்ஸிடென்ட் நடந்தால், தனியார் ஆம்புலன்ஸ்காரங்களுக்கு யார் தகவல் கொடுக்கறாங்கன்னு தெரியல; வேகமாக வந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடறாங்க'' என்றாள்.''எப்படியாவது உயிரை காப்பத்தலாம்ன்னு தானே போறாங்க்கா''''அட... அப்படியிருந்தாக்கூட பரவாயில்லையே. பல்லடத்துல, சமீபத்தில, ஏக்ஸிடென்ட் நடக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு. தகவல் கிடைச்சதும், போலீஸ்காரங்களும் சரி, ஆஸ்பத்ரியில இருக்கறவங்களும் சரி, தனியார் ஆம்புலன்சுக்குத்தான் போன் போட்டு சொல்லிடறாங்களாம்,''''தனியார் ஆம்புலன்ஸ் வந்துட்டு போனதற்கு அப்புறமா, ஆமை மாதிரி 108 வருதாம். இப்டி உயிர் போற நேரத்திலும், சம்பாதிக்க நினைக்கறவங்க மீது நடவடிக்கை எடுத்தா பரவாயில்லையே,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.இருவரும் சாப்பிட்டு முடித்து, தண்ணீர் குடித்ததும், மித்ராவின் மொபைல், 'பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா? என்று கவுண்டமணி டோனை வெளியிட்டது.பேசி விட்டு வைத்த மித்ராவிடம், ''இங்க யாருமே இல்லையா... கிருஷ்ணகிரி ரிட்டயர்டு பி.டி.ஓ.,வேதான் வேணுமா?'' என்றாள் சித்ரா.''என்னங்க்கா.. கவுண்டமணி 'டயலாக்' மாதிரி சொல்றீங்க?''''இல்லடி. துாய்மை பாரத இயக்க திட்டத்துல, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் லட்சக்கணக்குல பணம் ஒதுக்கி, சுவர் விளம்பரம் செய்யறாங்க. வரையற வேலையை, மொத்தமா, கிருஷ்ணகிரி மாவட்டத்த சேர்ந்த ரிட்டயர்டு பி.டி.ஓ.,வுக்கு கொடுத்திருக்காங்க''''அவரோட ஆளுங்க, இஷ்டப்பட்ட கிராமத்துக்கு போயி, வரையறாங்களாம். மத்தபடி, எந்த அதிகாரியும் அதை கண்காணிக்கறது இல்லையாம். இதனால, இஷ்டத்துக்கு பணத்தில் கை வக்கிறாங்களாம். மத்திய அரசு பணத்தை எப்படியெல்லாம் 'ஏப்பம்' விடறாங்கன்னு பாரு,''''அக்கா.. நீங்க சொல்றது சரிதான். அதிகாரிங்க கண்காணிச்சா பரவாயில்லையே. அவங்களுக்கு 'பங்கு' போறதால, கம்முன்னு இருக்காங்க,''''நீ.. சொல்றதும் கரெக்ட்தான். அது சரி மித்து, ரெவின்யூ அதிகாரிகள் மீது, அமைச்சர் வழியாக, முதல்வருக்கு பெட்டிஷன் கொடுத்தாங்களாம். உனக்கு ஏதாவது தெரியுமா?,''''ஓ.... நல்லா தெரியுமே. தேர்தல் நேரத்துல, அதிகாரிங்க மொத்தமாக கூட்டு சேர்ந்து, காலை வார பார்க்கறாங்க. ஓ.ஏ.பி., விதவைகள் ஓய்வூதியம் வாங்கிட்டு இருந்த பயனாளிகளை, கொத்துக்கொத்தா, நீக்கிட்டாங்க. எலக்ஷன் வர்றது தெரிஞ்சும் கூட, ஏ.டி., காலனியில் பயனாளிகளை நீக்கிட்டு இருந்தா, ஒட்டுமொத்தா கட்சிக்கு 'டாட்டா' காட்டிட்டு போயிடுவாங்கன்னு கட்சிக்காரங்க புலம்பிட்டு, சி.எம்., காதில் போட்டுட்டாங்களாம்,''''புகார் சொன்னா அதற்கு தீர்வு கிடைச்சா, பரவாயில்லையே... இல்ல எதிர்க்கட்சியில் நடக்கற மாதிரி 'புஸ்'ன்னு போயிடுமா?'' சித்ரா கேட்டாள்.''தெரியலைக்கா... அதை விடுங்க. புதுசா ஆரம்பிச்ச ஸ்டேஷனில், எஸ்.ஐ., ஒருத்தர் மக்கள்கிட்ட எரிஞ்சு விழறாராம்,''''ஆமாண்டி மித்து. பிரம்மஹத்தி தோஷம் போக்கும் முருகர் கோவில் கிட்ட உள்ள ஸ்டேஷனில், கட்டட கான்ட்ராக்டர் கிட்ட வேலை பார்த்த ஒரு குடும்பத்தினருக்கு, சம்பளம் பாக்கியை கொடுக்கவில்லை என்று அந்த ஸ்டேஷனில் புகார் செஞ்சிருக்காங்க,''''காலையிலிருந்து ராத்திரி வரைக்கும், அந்த குடும்பத்தை காக்க வச்சிட்டு, அனுப்பிச்சாராம். இந்த விஷயம், அவங்க அதிகாரி காதுக்கு போனதால, அவர் 'டோஸ்' விட்டிருக்கார். மறுநாள் ஸ்டேஷனுக்கு போன அந்த குடும்பத்தினரிடம், 'மேல சொன்னா நாங்க பயந்துடுவமா?' மிரட்டும் தொனியில் கேட்டாராம்,''''இந்த மாதிரி போலீசால்தான் மத்தவங்களுக்கும் கெட்ட பேர். அப்பாவிகிட்டதான், இவங்க தங்களோட வீரத்தை காட்டுவாங்க,'' என்று மித்ரா சொன்னதும், மக்கள் சத்தம் அதிகமாக கேட்டது. எழுந்து நின்னு பார்த்த சித்ரா, 'அட.. ஜல்லிக்கட்ட பார்க்கறதுக்கு, 'கார்த்தி' வந்திருக் காரு,'' என்றாள்.ஆவல் மிகுதியால், மித்ராவும் பார்த்து விட்டு, ''சமீபகாலமா, இவர் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கறாரு. மத்த நடிகர்கிட்ட இருந்து வித்தியாசம் காட்டறாரு. தாராபுரத்திலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துட்டு அசத்தினாராம்,'' என்றாள்.''நீ... தாராபுரம்னு சொன்னதும், அங்கிருக்கிற ஸ்டேஷனில், ரெண்டு பேர், குறுநில மன்னர் மாதிரி நடந்துட்டு, ஓவரா பண்றாங்களாம். சரக்கு, சீட்டு, கஞ்சா, சேவல்கட்டு இப்படி.. சட்ட விரோத விஷயங்களில், மாமூல் வாங்குவதில் ஆரம்பித்து, எப்.ஐ.ஆர்.,போடற வரைக்கும், இவங்க வைக்கிறதுதான் சட்டமாம்,'' சித்ரா சொல்லி முடித்ததும், ''தாராபுத்தை சேர்ந்த 'காளிமுத்து, இஷாக்' இருவரும், வாடிவாசல் அருகில் வரவும்,'' என ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.அப்போது, காங்கயம் காளையை அதன் உரிமையாளர் வேனில் கொண்டு சென்றார். அதைப்பார்த்த மித்ரா, ''வாவ்... எவ்ளோ சூப்பரா இருக்கு, பாருங்க,'' என்றாள். உடனே, வேன் நிற்கவே, இருவரும், ஓடிச்சென்று, செல்பி எடுத்து கொண்டனர்.திரும்பவும் வந்து உட்கார்ந்து கொண்ட சித்ரா, ''இந்த 'காளைக்கு' பேர் போன ஊரிலுள்ள ஸ்டேஷனில் ஒரு 'சின்ன அய்யா' தன்னிஷ்டத் துக்கு, நடந்துக்றாராம், உள்ளூரை சேர்ந்த ஒரு நபரை வைத்து கொண்டு 'வெய்க்கிள் செக்கப்'பில், வசூலில் பட்டைய கிளப்புறாரு,''''இதைப்பத்தி, பெரிய அய்யா கேட்டாக்கூட, மரியாதை கொடுக்கிறது இல்லையாம். அதே மாதிரி, பப்ளிக் யாராச்சும் வந்தா, வா... போ...ன்னு பேசறதுன்னு, ஓவர் பில்டப் கொடுக்கறாராம்,''அவ்வழியே வந்த ஒருவரை பார்த்து, ''குமாரு. நீங்க மட்டுந்தான் வந்தீங்களா. அவங்க எங்கே?'' என்று கேட்டாள் மித்ரா.அவரும் பதில் சொல்லி நகர்ந்ததும், ''ஏன்... மித்து. கவர்மென்ட் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் சுருட்டிய 'மாஜி'யோட பி.ஏ., இன்னும், பணம் தரலையாம். பாதிக்கப்பட்டவங்க 'மாஜி'யிடம் சொல்லியும் பிரயோஜனமில்லைன்னு, 'சவுத்' மூலமா, சி.எம்., கிட்ட மேட்டரை கொண்டு போக முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் ஒருவரை போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். அருகிலிருந்த போலீசிடம் சித்ரா விசாரித்ததில், 'சந்தடி சாக்கில, கூட்டத்துக்குள்ள 'சரக்கு' வித்ததால, கூட்டிட்டு போறாங்க' என்று பதில் கிடைத்தது.அதைக்கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்த மித்ரா, ''ஏக்கா.. அவர் சரக்கு வித்தாரு, புடிச்சாங்க. காந்தி நினைவு நாள் அன்னைக்கி, 'நார்த்' லிமிட்டில், லாட்டரி சீட்டு கும்பலிடம், 86 ஆயிரம் பறிமுதல் செஞ்சிட்டு, 16 ஆயிரம் ரூபாயும், குட்கா விற்ற ஒருவரிடம், 18 ஆயிரம் புடிச்சிட்டு, 8 ஆயிரமும் தான் கணக்கில் காட்டினார்களாம்,''''அப்ப மீதி பணம் எங்கே போச்சாம். கடவுளே,'' என்று கும்பிட்டபடியே எழுந்த சித்ராவை, தொடர்ந்தாள் மித்ரா. அப்போது, 'முக்கிய அறிவிப்பு. இங்கே ஒருவர் மயக்கமாகி விட்டார். மெடிக்கல் டீமில் உள்ள ராஜேந்திர பிரசாத், கணேசன், பரமேஸ்வரி ஆகியோர் உடனடியாக மேடை அருகே வரவும்,'' என ஒலிபெருக்கி அலறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X