சாரதா மோசடி: ராகுல் அன்று சொன்னது என்ன ?

Updated : பிப் 05, 2019 | Added : பிப் 05, 2019 | கருத்துகள் (107)
Advertisement

புதுடில்லி: மேற்குவங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடியால் பல ஆயிரம் மக்கள் பணம் ஸ்வாகா ஆனது. கடந்த 2013 ல் இருந்து வெளியாகும் இந்த மோசடி சுப்ரீம் கோர்ட் தலையிட்டுக்கு பின்னர் வெளிஉலகிற்கு தெரிய வந்தது. பெரும் பண மோசடி என அந்நாளில் விமர்சித்த ராகுல் இன்று மம்தாவுக்கு ஆதரவு தெரிவிப்பது அவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.







சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 2013ல் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, மம்தா ஆட்சியில்தான் இந்த விசாரணை துவங்கியது. இந்த மோசடி தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் பல விதமாக கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது காங்., தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் , மம்தா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டுவிட்டில்;
" மம்தாவிற்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். மேற்குவங்கத்தில் நடந்து கொண்டிருப்பது, இந்திய அமைப்புக்களின் மீது மோடியும் பா.ஜ.,வும் நடத்தும் தாக்குதல். இந்த பாசிச சக்தியை தோற்கடிக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய உள்ளோம்' என பதிவிட்டுள்ளார்.


நிலை மாறிய பதிவுகள்


மோசடி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டபோது 2013- 15 வரை ராகுல் பதிவிட்ட டுவிட்டர் கீழே தரப்பட்டுள்ளது. 'ஊழலை ஒழிக்க வேண்டும் என கூறியிருந்த மம்தா, மேற்கு வங்கத்தை சூறையாடியவர்களை பாதுகாக்கிறார். 'மேற்கு வங்கத்தில் சிட்பண்ட் மோசடியால் 20 லட்சம் அப்பாவி மக்கள் பணத்தை இழந்துள்ளனர்'
'மற்றொரு டுவிட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் சாரதா சிட்பண்ட்; அதனைப்பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா வாய் திறக்க மறுக்கிறார்' இவ்வாறு பதிவு செய்தார்.







சிபிஐ விவகாரம் என்பதாலா ?


2014ல் மேற்குவங்க தேர்தலில் சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர் என பிரசாரம் செய்தார் ராகுல். ஆனால் தற்போது மோடி நிர்வாகத்தின் கீழ் வரும் சிபிஐ விவகாரம் என்பதால் மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இதில் இருந்தே அவரது இரட்டை வேடம் வெளியே தெரிய வந்துள்ளது என்கின்றனர் மக்கள்.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
07-பிப்-201916:56:56 IST Report Abuse
dandy இவன் எல்லாம் இந்தியாவில் அரசியலில் ....இந்தோனேஷியா சுகார்ட்டோ குடும்பம் ..பிலிப்பீன்ஸ் மார்கோஸ் குடும்பம்..இலங்கை பண்டாரநாயக்க குடும்பம் இவைகளை அந்த நாட்டு மக்கள் குப்பையில் என்றோ எறிந்து விட்டார்கள் ..பாவம் உலகில் ஆக கூடிய படிக்காத இந்திய மாக்கள்
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
07-பிப்-201908:15:59 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் பப்பு ஒரு வேடதாரி..... இத்தாலி மாபியா.....
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
07-பிப்-201907:20:24 IST Report Abuse
K.   Shanmugasundararaj இன்று மம்தாவை எல்லோரும் ஆதரிப்பது என்பது சாரதாஊழல் தொடர்பாக அல்ல.மோடி அரசு கையாண்ட விதம் பற்றி தான்.ஐந்து ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம் தூங்கிவிட்டு , தீடிரென முழித்தது போன்று , மாநில அரசுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காது , எந்த வித வாரண்ட் / சம்மன் எதுவும் இன்றி மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க , அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு செயலுக்கு.ஆகவே மோடியின் , ஜனநாயக விரோத , சர்வாதிகாரமான நடவடிக்கையை கண்டித்து தான் எல்லா கட்சிகளும் சகோதரி மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.சாரதா சீட் பண்ட் ஊழலில் சம்பந்தம் உடைய சிலர் இன்று மோடியின் மடியில் படுத்து உறங்குகின்றனர் ..அவர்கள் மதவெறி கட்சி பி ஜெ பி யில் சேர்ந்து விட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை கிடையாது.மோடி ஊழலை ஒழிக்க விரும்ப வில்லை.ஊழல் செய்தவர்கள் பி ஜெ பி சேர்ந்து விட்டால் நடவடிக்கை கிடையாது. இல்லை என்றால் கட்டாயம் ஊழல் ஒழிக்கப்பட , அவர்கள் மீது நடவடிக்கை உண்டு.இது தான் ஊழல் ஒழிப்பில் மோடியின் பார்முலா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X