சி.பி.ஐ.,க்கு எதிராக போராடவில்லை: மம்தா

Updated : பிப் 05, 2019 | Added : பிப் 05, 2019 | கருத்துகள் (85)
Advertisement

கோல்கட்டா: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு எங்களுக்கு கிடைத்த தார்மீக ரீதியிலான வெற்றி. எங்களது போராட்டம் மோடி அரசுக்கு எதிரானதே தவிர சிபிஐக்கு எதிரானது அல்ல என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.தர்ணா


சிபிஐ - மேற்கு வங்க அரசு இடையிலான மோதல் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமார் மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை பிப்.,20க்கு ஒத்திவைத்தது.


அதிகாரிகளுக்கு பலம்


கோர்ட் .உத்தரவு தொடர்பாக கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு எங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கோர்ட் உத்தரவை மதிக்கிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படுவோம். மோடி அரசு, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என கூறவில்லை. ராஜிவ் குமாரை கைது செய்ய முடிவு செய்த சிபிஐ, முறையாக எந்த நோட்டீசும் அளிக்காமல், அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், போலீஸ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என கோர்ட் கூறியுள்ளது. இது நேர்மையான அதிகாரிகளுக்கு பலத்தை ஏற்படுத்தும். இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. தேசத்திற்கு கிடைத்த வெற்றி. மேற்கு வங்க அரசுக்கு எதிரான சிபிஐயின் அவமதிப்பு வழக்கை கோர்ட் ஏற்கவில்லை.


முக்கிய குற்றவாளி கைது


ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மோடியும், அமித்ஷாவும் உள்ளனர். மோடியும் அமைச்சர்களும் என்னை அச்சுறுத்துகின்றனர். இந்த போராட்டம் திரிணாமுல் கட்சியின் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது . மேற்கு வங்க அரசு தேச நலனிற்காக தான் செயல்படுகிறது. சிட்பண்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுதிப்தா சென் என்பவரை நாங்கள் தான் கைது செய்தோம்.

போராட்டத்தை எப்போது முடிப்பது என எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசிய பின் முடிவு செய்வேன்.போராட்டம் எனக்கு புதிது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
06-பிப்-201908:02:04 IST Report Abuse
krish தர்ணாவை முடித்துக் கொண்டார் என்பது பின் செய்தி. நன்றி. கவிந்து விழுந்தாலும் மீசையிலே, மண் ஒட்டலைதானே.. முழு பூசணிக்காயை முற்றிலும் மண்ணிலே புதைக்க கைதேர்ந்தவர்கள் அரசியல்வாதிகள் என்பது யார் அறியாதது? ...
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
06-பிப்-201906:14:22 IST Report Abuse
Balakrishnan S சாரதா, ரோஸ் வெல் போன்று நம்மூர் ராயப்பேட் பெனிஃபிட் பண்ட், ஆழ்வார்பேட் பெனிபிட் பண்ட் இவைகளை மீண்டும் தோண்டி எடுத்தால் இங்கு உத்தமர் வேடம் போட்டுத் திரியும் 2 கட்சித் தலைவர்கள் - நடிகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
05-பிப்-201922:33:23 IST Report Abuse
Ramesh As that commissioner knows all information about SARADA CHIT FUND FRAUD which involves many POLITICIANS especially from TMC, she is fearing and acting as SAVIOUR of Democracy...I came through friends that TMC workers are doing ROWDISM at par with Communist ,DMK in its initial period, RJD etc...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X