பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்ப்பு ஏன்? மம்தாவுக்கு மாலன் கேள்வி

Added : பிப் 05, 2019 | கருத்துகள் (30)
Advertisement

சென்னை: மூத்த பத்திரிகையாளர் மாலன், சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது: 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆனந்தபஜார் பத்திரிகா அயல்நாட்டு உளவுத்துறை அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு தொடர் வெளியிட்டது. அதில் சாரதா குழுமம், திரிணாமுல் எம்பியும், சிமி அமைப்பின் நிறுவன உறுப்பினருமான அஹமது ஹசன் இம்ரான் மூலமாக ஜமாத் ஏ இஸ்லாமி என்ற வங்கதேச தீவிரவாத அமைப்பை பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது என்று அந்தத் தொடரில் எழுதியது. ஜமாத் ஏ இஸ்லாமி இதன் மூலம் கிடைத்த கமிஷன் பணத்தை அங்கிருந்த அரசுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றப் பயன்படுத்தியது. வங்கதேச மனித உரிமை ஆர்வலர் ஷாரியார் கபீர் அல்கொய்தாவிற்கும் பணம் போயிருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார்.
தனது கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் மம்தா சிபிஐ விசாரணையை எதிர்க்கிறாரா?

சாரதா ஊழல் பற்றிய விசாரணைகளை அவர் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறார். வங்க தேச விவகாரம் வெளியானதும் ஷேக ஹசீனா அரசு அதைக் குறித்து ஆராய, ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தது. மம்தா, வங்கதேச தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்தார் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்கு உத்திரவிட்டார். 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு சிதம்பரம் இந்த நடவடிக்கை எடுக்கிறார் என்று மம்தா ஆவேசமாக குற்றம் சாட்டினார் அவரது மனைவி அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் தெரியுமா? என மேடைகளில் பேசினார். வங்க சட்ட அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா தலைமையில் திரிணாமுல் கட்சியின் மகளிர் அணியினர் சிபிஐ அலுவலகம் முன்பு தர்ணாவில் அமர்ந்தனர்

இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய வேளையில் அதை விட்டுவிட்டு சாலையில் அமர்ந்திருக்கிறார் மமதா. மே.வங்கத்தில் பல கட்சிக் கூட்டம் நடத்தியதால்தான் பாஜக இந்த நடவடிக்கை எடுத்தது என்கிறார்களே?
விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். மே 9 2014 அன்று நீதிபதிகள் தாக்கூர், நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த ஆணையைப் பிறப்பித்தது. அப்போது பாஜக அரசு பதவியேற்றிருக்கவில்லை. 2014 தேர்தல் முடிவுகள் மே 16 அன்றுதான் வெளியாகின.
இந்த ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரிபுரா அரசும் எனக் கோரியிருந்தது. தேசம் காப்போம் என எதிர்கட்சிகள் முழங்குகின்றனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தேசம் காப்போம், அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்று எதிர்கட்சிகள் சீறி எழுகிறார்கள். இவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட எமர்ஜென்சியின் போது எந்தத் தரப்பில் இருந்தார்கள் என்பதை நாடறியும் தேசம் காக்கப்படத்தான் வேண்டும். யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-201918:59:35 IST Report Abuse
Brindha Sundar தவறு யார் செய்தலும், தன்னை சேர்ந்தவராகவே இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்... மக்கள் இதில் எப்பொழுதும் உறுதியாக இருக்கவேண்டும். தன் பிள்ளைகளுக்கு அப்படியான நீதியினை போதித்து வளருங்கள். வீட்டிலும் இதனை பின்பற்றுங்கள். பின்பற்றவையுங்கள். அந்த நிலை மாறியதின் விளைவே இது போன்றவர்கள் உருவாக காரணம். நாடும் நாட்டு மக்களும் இது போன்ற உழல்வாதிகளிடம் மாட்டி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறோம்.
Rate this:
Share this comment
05-பிப்-201919:59:40 IST Report Abuse
rosline, usaமம்தா மேற்கு வங்காளம் பங்களாதேஷில் இருப்பதாக நினைத்து பேசி வருகிறார்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-பிப்-201918:57:50 IST Report Abuse
Bhaskaran இவர் suntv மற்றும் குங்குமம் ஆசிரியாராகஇருக்கும்போது ஜெயலலிதாவை குற்றம் சாட்டிப்பேசுவார் இப்போதுதான் திருந்தியுள்ளார்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
06-பிப்-201910:36:08 IST Report Abuse
சுந்தரம் அதெல்லாம் வாங்கும் கூலிக்காக. இப்போது பாஜக அணி பக்கம் இருப்பதால் ஜெயாவை பற்றி பேசக்கூடாது என்று மேலிட உத்தரவு....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-பிப்-201918:54:57 IST Report Abuse
vbs manian ஊழலின் மையத்தை நெருங்கினால் இன்றைய அரசியல் வாதிகள் ருத்ர தாண்டவத்தை ஆடுவார்கள். ஜனநாயகம் அரசியல் சாசனம் என்ற போர்வைகளால் தங்களை போர்த்தி கொள்வார்கள். கொல்கத்தாவில் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X