தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா

Updated : பிப் 05, 2019 | Added : பிப் 05, 2019 | கருத்துகள் (62)
Advertisement

கோல்கட்டா: மத்திய அரசுக்கு எதிராக 3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றார்.







சிட்பண்ட் மோசடி தொடர்பாக கோல்கட்டா கமிஷனரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த முயன்றது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.க்கு எதிராக, மேற்கு வங்க அரசின் மோதல் முற்றியது. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டம் நடத்தினார்.






மேற்கு வங்க அரசுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே.வங்க அரசு மீதான அவமதிப்பு வழக்கு குறித்து தலைமை செயலர், போலீஸ் டிஜிபி, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும். கோல்கட்டா போலீஸ் கமிஷனர், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.






இதன் பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, கோர்ட் உத்தரவு, தங்களுக்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார். தொடந்து கோல்கட்டா வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மம்தாவை சந்தித்து பேசினார்.






இதன் பின்னர், 3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மம்தா அறிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், 'கோர்ட் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதால் தர்ணாவை கைவிடுகிறேன். இந்த போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-பிப்-201908:07:50 IST Report Abuse
kulandhai Kannan புஸ்வாணம்
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
06-பிப்-201907:54:21 IST Report Abuse
krish கவிந்து விழுந்தாலும் மீசை மண்ணிலே ஓட்டலே......தன் ஒரு விரல், ஆட்சி துஷ்ப்ரயோகத்தை காட்டும் பொது, தன்னுடைய மற்ற மூன்று விரல்கள் தன்னை நோக்கி உள்ளது எனபதை மறந்தாரோ? மமதை மமதாஜி அம்மையார் அவர்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
06-பிப்-201906:52:10 IST Report Abuse
Rpalnivelu ஜெ அவர்கள் மமதாவை போல பல மடங்கு அதிகாரமும் தொண்டர்பலமும் பெற்றிருந்தவர். அவரே நீதிக்குமுன் தலை வணங்கினார். ஆனால் மம்தாவோ, கட்டுமரம் போல நீதியை மதிக்காமல் பேயாட்டம் போடுகிறாரே. "அய்யோ அம்மா கொல்றாங்களே" என்று கூவிக் கொண்டு ஜெயிலுக்கு வெளியே தர்ணா இருந்தாரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X