சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையனை கொன்று கிணற்றில் வீசிய மக்கள்

Added : பிப் 05, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 கொள்ளையனை கொன்று கிணற்றில் வீசிய மக்கள்

வேலுார்: வேலுார் அருகே, கொள்ளையனை அடித்துக் கொன்ற பொதுமக்கள், உடலை கிணற்றில் வீசினர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, தமிழக - ஆந்திரா எல்லையில், கொசவன் புதுாரைச் சேர்ந்தவர் விவசாயி கலாநந்தன், 65; வீட்டில், தனியாக வசிக்கிறார்.நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, ஐந்து நபர்கள், இவர் வீட்டு கதவை தட்டினர். ஜன்னல் வழியாக பார்த்ததில், கத்தி, அரிவாளுடன் கொள்ளையடிக்க வந்திருப்பது தெரிந்தது. இது குறித்து, உறவினர்களுக்கு, மொபைல் போனில், கலாநந்தன் தெரிவித்தார். சிறிது நேரத்தில், உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும், கொள்ளையர்கள் தப்பியோடினர். விரட்டியதில், ஒருவனை மட்டும் பிடித்து, அங்குள்ள மரத்தில் கட்டி, 'தர்ம அடி' கொடுத்தனர். படுகாயமடைந்த அவன் இறந்தான். அருகில் இருந்த, 20 அடி கிணற்றில், அவன் உடலை வீசிச் சென்றனர்.தகவலறிந்த, கே.வி., குப்பம் போலீசார், கிணற்றில் இருந்து கொள்ளையன் உடலை மீட்டனர். பேன்ட் பாக்கெட்டில் இருந்த வாக்காளர் அட்டை மூலம், இறந்தவன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சனன் ஜார்பால், 35, என தெரிந்தது.போலீசார் கூறியதாவது:வட மாநிலத்தைச் சேர்ந்த, 2,000த்துக்கும் மேற்பட்டோர், வேலுாரில் தங்கியுள்ளனர். இவர்கள், பகலில் பொம்மை, துணிகள், பேன்ட், ஷர்ட் விற்பனை செய்தபடியே, வீடுகளை நோட்டமிடுகின்றனர். பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக இருப்பவர் விபரம் தெரிந்து, அதிகாலை, 2:00ல் இருந்து, 4:00 மணிக்குள் கொள்ளைஅடிக்கின்றனர். இறந்த குஞ்சனன் ஜார்பால், கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவன்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குஞ்சனன் ஜார்பால் கொலை தொடர்பாக, போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த, 20 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.seetharaman - tirupur,இந்தியா
12-பிப்-201909:36:14 IST Report Abuse
p.seetharaman வாடா நட்டு மனிதர் செய்யும் அட்டகாசம் மிக மோசம் வட நாட்டினரை விரட்டினால் கொலை கொள்ளை இருக்காது
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
11-பிப்-201916:35:03 IST Report Abuse
M.Guna Sekaran சூப்பர் வாழ்க வேலுார் மாவட்ட மக்கள் இதை வரவேருக்க ஒருத்தனும் வர மாட்டான் .
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
11-பிப்-201912:02:04 IST Report Abuse
S.M.Noohu போலீசு.. கேசு ... அப்படி..இப்படின்னு போகாம .. நல்ல தீர்ப்பு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X