சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 05, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
'தப்பு செய்வாங்களாம்... அதை தட்டிக் கேட்கக் கூடாதாம்... தப்பு செய்பவர்களுக்கு வக்காலத்து வேறு இங்கே... சுயமரியாதைக்கும், தப்பு செஞ்சாலும், வீராப்பு பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு...' என, கோபப்படத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மைய கட்சி தலைவர், கமல் பேட்டி: சி.பி.ஐ., அமைப்பை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர், மம்தா போராடி வருகிறார். தமிழகத்திலும், அதுபோன்று
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'தப்பு செய்வாங்களாம்... அதை தட்டிக் கேட்கக் கூடாதாம்... தப்பு செய்பவர்களுக்கு வக்காலத்து வேறு இங்கே... சுயமரியாதைக்கும், தப்பு செஞ்சாலும், வீராப்பு பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு...' என, கோபப்படத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மைய கட்சி தலைவர், கமல் பேட்டி: சி.பி.ஐ., அமைப்பை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர், மம்தா போராடி வருகிறார். தமிழகத்திலும், அதுபோன்று நடந்திருக்க வேண்டும்; ஆனால், அது நடைபெறவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை, சுயமரியாதை உள்ள எந்த அரசும் ஏற்றுக் கொள்ளாது.

'உங்களுக்கு ஏன் மண்டை குடையுது... அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தால், உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படும்ன்னு நினைக்கிறீங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தினகரனின் ஆதரவாளர், வெற்றிவேல் பேட்டி: அ.தி.மு.க.,வில் உள்ள, முன்னாள் அமைச்சர், பொன்னையன், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை ஆகியோர், பா.ஜ.,வை மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி, முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் எதுவும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில், இருவரும் அமைதி காப்பது ஏன்? இதனால், அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்து, பல நாட்கள் ஆகி விட்டன.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார் பேட்டி: 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டடம், 48 மாதங்களில் மக்கள் கண்முன் நிற்கும். அதற்கு, 1,264 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து, ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்ற முடியாத நலத்திட்டங்களை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்திவருகிறது.

பா.ஜ., தேசிய செயலர் ராஜா பேட்டி: பிரதமர், மோடி சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறார். மீண்டும், அவரே நாட்டின் பிரதமராக வர வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன், தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி அமைக்கும். பிரதமர், மோடியை எதிர்க்கும் சில்லுண்டிகள், தேர்தல் களத்தில் காணாமல் போவர்.

'உஷ்... பேசாம இருங்க... கூட்டம் கூடுற இடத்துல, அவருக்கு எதிர்ப்பு கிளம்பத் துவங்கி இருக்கு... நீங்களும் எதிர்ப்பு தெரிவிச்சா, தலைவருக்கு, 'செம' கோபம் வந்திடும்... ஆமா...' எனச் சொல்லிச் சிரிக்கத் தோன்றும் வகையில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், கே.சி.வீரமணி பேட்டி: தி.மு.க., தலைவர், ஸ்டாலின், லோக்சபா தேர்தலையொட்டி, கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில், மக்கள் தெரிவிக்கும் ஒரு கோரிக்கையாவது, தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியுமா?

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
06-பிப்-201905:29:05 IST Report Abuse
Cheran Perumal திருப்பூர்லதான் துறைமுகம் அமைப்போம்னு சொல்லிட்டாரே மற்றவர்களால் முடியாத விஷயங்களை முடித்துக்காட்டுவதுதான் ஸ்டாலினின் திறமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X