பொது செய்தி

தமிழ்நாடு

ஐஸ்லாந்து பெண்ணுக்கு குடந்தையில் மணி விழா

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஐஸ்லாந்து பெண்,குடந்தை,மணி விழா

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, கொற்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், ஐஸ்லாந்து பெண்ணுக்கு நேற்று மணி விழா நடந்தது.


யாத்திரை:

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 22 ஜோதிடர்கள், தமிழகத்துக்கு, கோவில் சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் உள்ள, 27 நட்சத்திர கோவில்களிலும் வழிபடுவதற்கான யாத்திரையை, ஜன., 17ல் துவங்கினர். கும்பகோணம் அருகே, கொற்கையில், அவிட்டம் நட்சத்திரத்துக்குரிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தனர்.

சுற்றுலா வந்தவர்களில் ஒருவரான, ஐஸ்லாந்து பெண் அனா என்பவருக்கு, 60 வயது பூர்த்தியானதை ஒட்டி, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், 51 கலச பூஜையை, 11 வேத விற்பன்னர்கள் மூலம் நடத்தினர். இதில், சுற்றுப்புற கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

யாத்திரை குழுவை வழி நடத்தும் பார்த்திபன் கூறியதாவது: நட்சத்திர கோவில் யாத்திரைக்காக, தமிழகம் வந்துள்ள இவர்கள், காஞ்சிபுரம், மதுரை, நாகை மாவட்டங்களில் உள்ள, 23 கோவில்களை வழிபட்டு, 24வது கோவிலாக, கொற்கை கோவிலுக்கு வந்து மணி விழா நடத்தி உள்ளனர்.

சத்திர கோவில்கும்பகோணம் பகுதி யில் உள்ள, ஏழு நட்சத்திர கோவில்களிலும் ஒரு வாரம் தங்கி வழிபட்ட பின், யாத்திரையை வரும், 8-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
07-பிப்-201914:53:44 IST Report Abuse
SENTHIL NATHAN மற்ற நாட்டு மக்கள் நமது மத நம்பிக்கையை மதித்து ஏற்று கொண்டு இங்கு வருகின்றனர். நம்மவர்களோ ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X